நீதிமன்றத்தினால் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டு பதினேழு வருடங்களுக்குப் பின்னர் தன்னை சந்திக்க வந்த கணவனை, மனைவி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், மனைவியை விட்டுப் பிரிந்ததினால் அவருக்கெதிராக மனைவினால் தொடரப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில், பல நீதிமன்ற அழைப்பாணைகளை புறக்கணித்தமையினால் பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி குறிப்பிட்ட நபருக்கு எதிராக பிடி விறாந்தினை பிறப்பித்திருந்தது.

அதன் பின்னர் கடந்த பதினேழு வருடகாலமாக மனைவியையோ பிள்ளைகளையோ பார்க்க வராமல் குறித்த நபர் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இதையடுத்து அந்நபர் நேற்றிரவு மனைவியை சந்திக்க வந்ந நிலையில், மனைவி எல்ல பொலிஸ் நிலையத்திற்கு கணவன் குறித்து தகவலை கொடுத்துள்ளார்.
குறித்த தகவலினடிப்படையில் எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.டி.எம். கருணாரட்ன தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததும். குறிப்பிட்ட நபரை, அவரது மனைவியே பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

கைது செய்யப்பட்ட நபரை, பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்ககைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version