மும்பையில் கணபதி விசர்ஜனம் இன்று நடந்தது. லால்பாக் என்ற இடத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்படும் மும்பையின் பிரசித்திபெற்ற ‘லால்பாக் மகாராஜ்’ என அழைக்கப்படும் ராஜ கணபதியும் இன்று கடலில் கரைக்கப்பட்டார்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு, லால்பாக் கணபதி வைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் புக முயற்சித்ததாக இரு இளம் பெண்கள் மீது மும்பை போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பானதையடுத்து மகாரஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ்,இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷனரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version