தனது காதலன் ஐ போன் 6 s வாங்கித் தரவில்லை என்பதற்காக, சீனாவில் இளம்பெண் ஒருவர் நடு ரோட்டில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், சீனாவின் நான்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் பிசியான மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அப்போது தனக்கு ஐ போன் 6 s வாங்கி தருமாறு தனது காதலனிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் தற்போது வாங்கித் தர முடியாது எனக் கூறியுள்ளார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த அந்த பெண், ஏன் வாங்கித் தரமுடியாது என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஒருகட்டத்தில் பிடிவாதம் அதிகமான அந்த இளம்பெண் நடு ரோட்டில், தான் அணிந்திருந்த ஆடைகளை கழட்டி எறிந்துவிட்டு , நிர்வாணமாக நின்று காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை அங்கிருந்த யாரும் தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர்.
அப்போது அந்த வழியாக சென்ற பெண்மணி ஒருவர் கவனித்து, அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்து கீழே கிடந்த ஆடைகளை எடுத்துக் கொடுத்து அணிந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
எங்கே போகிறது உலகம்?