ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு இலங்கை நேரப்படி 7.30 மணியளவில் ஐ. நா 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் தனது பிரதான உரையினை நிகழ்த்தியிருந்தார்.

மனித உரிமைகளை ஏற்றுக் கொள்வதுடன் அதனை பாதுகாப்பது மற்றும் விரிவுபடுத்துவதற்கான புதிய செயற்பாட்டு வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான இலங்கையின் பங்களிப்பை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் கடந்த காலத்தை நேர்மையாக கையாள்வது மற்றும் நவீன இலங்கையை கட்டியெழுப்புவது எங்கள் முன்னுள்ள பிரதான தேவையாக உள்ளது.

இலங்கை தெற்காசிய வலயத்தில் பழமையான ஜனநாயக உரிமைகளை பிரிதிநித்துவப்படுத்தும் நாடுகளில் முன்னிலையில் இருக்கின்றது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, இலங்கைக்கு நெருக்கடிகள் இருந்தபோதிலும் கூட மனித வள மேம்பாட்டு குறியீடூகள் உயர்ந்த அளவில் காணப்படுகின்றது என்றார்.

நிலையான வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருப்பது இஞைர்களே. 21 ஆம் நூற்றாண்டில் இளைஞர்கள், அறிவை அடிப்படையாகக் கொண்ட உலகை வெல்வதற்கு முடியுமான திறமைகளுடன் கூடிய தொழில் படையினராக மாற்றுவது எங்களின் முதற் குறிக்கோளாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சிங்கள மொழியில்…

Share.
Leave A Reply

Exit mobile version