நியூயார்க்: நீங்கள் காருடன் சிக்னலில் காத்து நின்றிருக்கும்போது, திடீரென ஒரு விமானம் உங்களைக் கடந்து சென்றால் எப்படி இருக்கும்?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ரெட் ஹில் அவென்யூ பகுதியில், சிக்னலில் எதிர் எதிரே வாகனங்கள் பலவும் பச்சை நிறத்துக்காக காத்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தப்பகுதியில், திடீரென ஒரு விமானம் சாலையில் தரையிறங்கியது.

வாகன ஓட்டிகள் பலரும் இச்சம்பவத்தால் திடுக்கிட்டுப் போயினர். தரையிறங்கியது ஒரு சிறிய ரக விமானம் என்பதால் அங்கு நின்றிருந்த மற்ற வாகனங்கள் எதிலும் மோதவில்லை.

இந்தச் சம்பவம், அதே சாலையில் சிக்னலுக்காக காத்திருந்த கார் ஒன்றின் டேஷ் போர்டில், வைக்கப்பட்டிருந்த கேமராவில் முழுமையாக பதிவாகியிருந்தது. இதுபோல விமானம் சாலையின் நடுவே தரையிறங்குவது, அமெரிக்காவுக்கு புதிதல்ல.

கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இதே போன்று, ஒரு முக்கிய ஹைவேயில் எரிபொருள் இல்லாத காரணத்தால், திடீரென விமானம் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version