ஜப்பானில் உள்ள Mount Fuji என்ற மலையில் உள்ள காடுகள் தான் உலகிலேயே அதிகமான நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் 2வது இடமாக அமைந்துள்ளது.

Aokigahara எனப்படும் அந்த காடுகள் தான் “தற்கொலை செய்து கொள்ள சரியான இடம்” என்று கூறப்படுகிறது.

கடந்த 1950ம் ஆண்டு தொடங்கிய தற்கொலைகள் ஆண்டுக்கு 10, 30 என அதிகரித்து 2002ம் ஆண்டில் 78 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஆன்மிகவாதிகள், அங்கு உயிரிழப்பவர்களின் ஆவிகள் அந்த காடுகளில் உள்ள மரங்களில் புகுந்து கொண்டு, அங்கு வரும் அனைவரையும் தற்கொலைக்கு தூண்டுவதாக கருதுகின்றனர்.

அது மட்டுமல்லாமல், அங்குள்ள எரிமலை மண்ணில் காந்த சக்தி அதிகம் காணப்படுவதால், அந்த பகுதியில் பயன்படுத்தப்படும் திசைமானிகள் சரியான திசையை காண்பிப்பதில்லை என்ற அறிவியல் காரணமும் கூறப்படுகிறது.

கடல் போல் மரங்கள் சூழ்ந்துள்ள அந்த காடுகளில், தற்கொலைகளை தடுப்பதற்காக ஆங்கங்கே உள்ள மரங்களில் பொலிசாரால் அறிவிப்பு பலகைகள் சில தொங்கவிடப்பட்டுள்ளது.

aokigahara_18அதில், உங்கள் வாழ்கை உங்கள் பெற்றோர் அளித்த விலை மதிப்பில்லா பரிசு!” என்றும், ”நீங்கள் தற்கொலை செய்ய முடிவெடுப்பதற்கு முன் பொலிசை அணுகுங்கள்” என்ற வாசங்கள் இடம் பெற்றுள்ளது.

ஆனால் பொலிசாரின் இந்த முயற்சிகள் எதுவும் அங்கு தற்கொலை செய்ய வருபவர்களின் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை.

எனவே ஆண்டுக்கு குறைந்தது 70 பேரின் இறந்த சடலங்காவது அங்கிருந்து பெறப்படுகிறது.

ஆனால் ஜப்பானிய அரசாங்கம் அந்த பகுதியை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் மக்கள் இந்த மலை பகுதிக்கு 3 விதமான மக்கள் வருவதாக கூறுகின்றனர்.

ஒன்று, Mount Fuji-யின் அழகை காண மலையேறி வருபவர்கள். இரண்டு, தற்கொலை செய்து கொள்ளும் இடத்தை பார்வையிட வருபவர்கள் மற்றும் மூன்றாவதாக தற்கொலை செய்யும் எண்ணத்துடன் வருபவர்கள்.

பொலிசார் ஒருவர் கூறுகையில், இந்த பகுதியில் தற்கொலை செய்துகொண்ட நான் ஏராளமானவர்களின் சடலங்களை பார்த்துள்ளேன்.

அவை பெரும்பாலும் அழுகிய நிலையிலும், மிருங்களால் குதறப்பட்டும் கிடக்கும்.

எனவே, இந்த இடத்தில் தற்கொலை செய்து கொள்வதில் எந்த அழகான காரணங்களும் இல்லை. ஆனாலும் இங்கு தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

மேலும் இங்கிருந்து எடுக்கப்படும் சடலங்களை காட்டை சேர்ந்த தொழிலாளர்கள் அதற்கென ஒரு சிறப்பிடத்தில் வைக்கின்றனர்.

அவ்வாறு வைக்கப்படும் சடலங்களுடன் இரவு வேளையில் யாரேனும் ஒருவர் தங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

சடலத்துடன இரவை கழிக்கபோவது யார் என்பதை கண்டுபிடிக்க rock, paper, scissors போன்ற விளையாட்டை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஏனெனில், சடலங்களை அந்த அறையில் இரவில் தனியாக வைத்திருந்தால், கெட்ட காலம் பிறக்கும் என்றும், அந்த ஆவிகள் இரவு முழுதும் கதறி அழத் தொடங்கி விடும் என்றும், மேலும் அந்த உடல்கள் தானாக நகர்ந்து செல்லும் எனவும் நம்புகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version