தமிழக சிறப்பு முகாமில் ஒன்றில், இடுப்புக்கு கீழ் இயக்கம் இல்லாத நிலையில் இளைஞர் ஓருவர் இன்று காலை 5:30 அளவில் “உயிருடன் இருப்பதை விட சாவதே மேல்” என கூறி விட்டு தனது மணிக்கட்டின் உயிர் நாடி நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் உள்ளார்.

அத்துடன் குறித்த செய்தி வெளிவரும் வரையில் உயிரை காப்பாற்ற அவசர சிகிச்சை பிரிவினரும் முன்வரவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

2012 ஆண்டு குறித்த நபரை விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தில் தமிழக காவல் துறையினர் கைது செய்து சிறப்பு முகாமில் சிறை வைத்தனர்.

தானாக இயங்க முடியாத இவரை பராமரிக்க பராமரிப்பாளர்கள் கூட நியமிக்கப்படவில்லை. மனிதாபிமான ரீதியில் கூட இவரது நிலை கருத்தில் கொள்ளப்படவில்லை.

இவரை பரமாரிக்க ஆட்கள் வேண்டும் என்பதனால் விடுவிக்க நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையிலும் இவர் விடுதலை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் உள்ள சிறப்பு முகாமான இந்த சித்திரவதை முகாமில் பராமரிப்பாளர் இன்றி முகாம் எனும் சிறை வாழ் அகதித் தமிழர்களே இவரை பராமரித்து வந்துள்ளனர்.

மேலும் இன்றில் இருந்து அகதிகள் அனைவரும் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் அவர்கள் உதவியும் தனக்கு இந்நாட்களில் இல்லை என்ற மன அழுத்தத்தில் தான் இருப்பதை விட இறப்பதே மேல் என கூறி கொண்டு கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, முகாமில் இருக்கும் அனைத்து அகதிகளும் இப்பொழுது உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.

எதை கேட்டார்கள் என்று எம் உறவுகளை இப்படி வதைக்கிறது இந்தியா. இன்று காந்தி ஜெயந்தியாம். மகாத்மா பிறந்த நாளாம் அகிம்சையை தோற்றுப் போக வைக்கும் அநீதிகளின் தேசமாக இருந்து கொண்டே புத்தன் பிறந்த பூமி என கொண்டாடுகின்றார்கள்.

அகிம்சைதோற்றுப் போன தேசம் இந்தியா. ஈழ மக்களை பொருத்தவரை துரோகத்திற்கு மேல் துரோகம் செய்யும் இந்தியாவின் அநீதிகளின் அடையாளங்களில் ஒன்று சிறப்பு முகாம்.

இத்தகைய நிலை தமிழகத்தில் பல முகாம்களில் இடம்பெற்று வருகின்றது. நான்கு சுவர்களுக்குள் வைத்து சித்தரவதை செய்யும் முகாம்கள் பற்றி தமிழக அரசு பாராமுகம் காட்டுவது குறித்தும் தமிழ் உறவுகளின் விடுதலைக்காகவும் தமிழகஉறவுகள் குரல் எழுப்ப வேண்டும்.

மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடும் இளைஞனுக்கு உதவ அனைத்து அமைப்புக்களும் ஊடகங்களும் ஒருமித்து குரல்கொடுக்க முன்வர வேண்டும்.

unnamed-191

Share.
Leave A Reply

Exit mobile version