கொட்­ட­கெத்­தன பெண்­களின் தொடர் படு­கொ­லை­களால் நாட­ளா­விய ரீதியில் பேசப்­ப­டு­கின்ற ஒரு பிர­தேசம். கடந்த 8 வரு­டங்­களில் 17 பெண்கள் கொடூ­ர­மான முறையில் பல்­வேறு வித­மாக கொலை செய்­யப்பட்­டி­ருந்த நிலையில் தற்­போது 18 ஆவது உயிரும் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளது.

நாதன் பாப்பு. 48 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தாய். இரத்­தி­ன­புரி கஹ­வத்தை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொட்­ட­கெத்­தன ஓப்­பாத்த தோட்­டத்தின் மேற் பிரிவில் வசித்­தவர்.

அதே தோட்­டத்தில் தபால் விநி­யோ­கஸ்­த­ராக இவரது கணவர் வேலை பார்க்க பாப்­புவோ தேயிலை தோட்­டத்தில் கொழுந்து பறித்து குடும்ப வண்­டியை ஓட்ட உத­வினார்.

பாப்­புவின் இரு மகன்­மாரும் திரு­ம­ண­மாகி ஒவ்­வொரு பிள்­ளை­க­ளுக்கு தந்­தை­யா­கி­யி­ருந்த நிலையில் பாப்­புவின் வாழ்வும் சாதா­ர­ண­மா­கவே கழிந்து வந்­தது.

இந்­நி­லை­யில்தான் கடந்த 28 ஆம் திகதி பிற்­பகல் 1.40 மணி­ய­ளவில் பாப்பு சர­மா­ரி­யாக வெட்­டப்­பட்ட நிலையில் அவர் கொழுந்து பறிக்கும் தேயிலை தோட்­டத்தின் ஒரு பகு­தியில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார். இதனைத் தொடர்ந்து கஹ­வத்தை பெண் படு­கொலை பீதி மீண்­டு­மொருமுறை தலைதூக்­கி­யுள்­ளது.

பாப்பு வழைமை போன்றே கொழுந்து பறிக்கச் சென்­றி­ருந்­த­துடன் வேலையை முடித்து விட்டு வீடு செல்லும் போதே இந்த கொடூ­ரத்­துக்கு உள்­ளா­கி­யுள்ளார்.

வெட்டுக் காயங்­க­ளுடன் இரத்த வெள்­ளத்தில் சட­ல­மாக பாப்பு இருந்த போது அது தொடர்பில் தோட்ட மக்கள் 119 அவ­சர தொலை­பேசி இலக்கம் ஊடாக உட­ன­டி­யா­கவே பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.

இந்­நி­லை­யி­லேயே ஸ்தலத்­துக்கு கஹ­வத்த பொலிஸார் உட­ன­டி­யாக சென்று விசா­ர­ணை­களை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தேயிலை தோட்­டத்தில் 100 மீற்­றர்­க­ளுக்கும் மேல் நீண்டு செல்லும் இரத்தக் கறைகள் காணப்­படும் நிலையில் பாப்பு விரட்டி விரட்டி வெட்­டப்­பட்­டி­ருக்­கலாம் அல்­லது வேறு இடத்தில் வெட்டிக் கொலை செய்து விட்டு சடலம் காணப்­பட்ட இடத்­துக்கு தூக்கி கொண்டு வந்து போட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்றனர்.

குறிப்­பாக பாப்­புவின் சட­லத்தில் 5 ஆழ­மான வெட்டுக் காயங்கள் சட்­ட­வைத்­திய அதி­கா­ரி­களால் அவ­தானிக்கப்பட்­டுள்­ள­துடன் அந்த காயங்கள் ஊடாக அதி­க­ளவு இரத்தம் வெளி­யே­றி­யமையே பாப்பு உயி­ரி­ழக்க கார­ண­மாக அமைந்­த­தாக பிரேத அறிக்­கையில் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

உண்­மையில் பாப்­புவின் சட­லத்தை பொலிஸார் ஸ்தலத்தில் அவ­தா­னித்த போது பல்­வேறு ஊடகங்­க­ளுக்கு அது தக­வ­ல­ளித்­தது.

அவரது உடல் காணப்பட்ட ­நி­லை­மை­யா­னது பாப்பு துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டாரா என்ற கேள்வியை எழுப்­பி­யது. எனினும் பிரேத பரி­சோ­த­னையில் பாப்பு துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­ட­தாக தெரியவராத நிலையில் சட­லத்தின் பாகங்கள் மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் மற்றும் பொரளை ஜீன்டெக் நிறு­வன விஞ்­ஞா­னி­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

இத­னை­விட பாப்­புவின் மர­ணத்­துக்கு பிர­தா­ன­மாக வித்­திட்ட காயம் அவ­ரது தலையில் காணப்­பட்ட வெட்­டுக்­கா­ய­மாகும்.

அந்த வெட்டுக் காய­மானது மண்­டை­யோட்­டையே பாதித்­தி­ருந்­த­துடன் பாப்­புவின் கைகள் மற்றும் தோள்பகுதியில் காணப்­பட்ட ஆழ­மான காயங்கள் கொலை­யா­ள­ியிடம் இருந்து அவர் தப்­பிக்க மேற்­கொண்ட போராட்­டத்தை பறை­சாற்றுவ­தா­கவே பொலிஸார் பார்க்­கின்­றனர்.

மிகக் கொடூ­ர­மாக பாப்பு இவ்­வாறு கொலை செய்­யப்­பட்டு நேற்­றுடன் நான்கு நாட்கள் கடந்தும் சந்­தேக நபர்கள் எவரும் கைது செய்­யப்­ப­டாத நிலையில் விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

எனினும் விசா­ர­ணை­களில் பல முன்­னேற்­றங்­களை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இரத்­தி­ன­புரி மற்றும் கேகாலை மாவட்­டங்­க­ளுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ், இரத்­தி­ன­புரி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பாலித்த சிறி­வர்­தன ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி லலித் ராஜ­மந்­தி­ரியின் கீழ் விசேட பொலிஸ் குழுக்கள் 20 விசா­ர­ணை­களை நடத்­து­கின்­றன.

இந்த விசா­ர­ணை­க­ளுக்­கென இரத்­தி­ன­புரி மாவட்டம் மற்றும் அதனை அண்­டிய பொலிஸ் நிலை­யங்­களில் கடமை­யாற்றும் 15 குற்­றப்­பி­ரிவு பொறுப்­ப­தி­கா­ரிகள் விசேட கட­மை­க­ளுக்­காக கொட்­ட­கெத்­தன ஓப்­பாத்த தோட்டத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

இதற்கு மேல­தி­க­மாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரட்ன, புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் விசேட குழு­வொன்றும் கொட்டகெத்­த­னவில் முகா­மிட்­டுள்­ளது.

இத­னை­விட விசேட தேடு­தல்கள் மற்றும் பாது­காப்பு பணி­க­ளுக்­காக சுமார் 200க்கு மேற்­பட்ட விசேட அதிரடிப்படை­யி­னரும் கொட்­ட­கெத்­தன பகு­தியில் நிலை­கொள்ளச் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

உண்­மையில் இவ்­வ­ளவு பிர­மாண்­ட­மான நட­வ­டிக்­கை­களில் கொட்­ட­கெத்­த­னவில் இதற்கு முன்னர் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளுடன் பாப்­புவின் படு­கொ­லைக்கு தொடர்பு உள்­ளதா என்­பது குறித்து கண்­ட­றி­வது பிர­தான பணி­களில் ஒன்­றாக கரு­தப்­ப­டு­கி­றது.

அத்­துடன் இது வரையில் கொட்­ட­கெத்­தன, ஓபாத்த, திம்­பு­லா­வல, வரா­பிட்­டிய என அக்கம் பக்க ஊர்­களில் உள்ள­வர்­க­ளையும் உள்­ள­டக்கி சுமார் 3000 பேரின் வாக்கு மூலங்­களை விசா­ரணை பொலிஸ் குழுக்கள் பெற்றுள்­ளன.

அத்­துடன் பாப்­புவின் சடலம் காணப்­பட்ட இடத்­தி­லி­ருந்தும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் தேடுதலின் போதும் கொலை­யா­ளியை தேடிய வேட்­டையை முன்­ந­கர்த்தத் தக்க சில தட­யங்­க­ளையும் சேக­ரித்­துள்­ளனர்.

குறிப்­பிட்டு சொல்­வ­தானால் விசேட விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு பாப்­பு­வுடன் தேயிலை தோட்­டத்தில் கொழுந்து பறித்த பெண் ஒருவர் வழங்­கி­யுள்ள வாக்­கு­மூ­லத்தில் அரை­காற்­சட்­டை­ய­ணிந்த அடை­யாளம் தெரி­யாத நபர் ஒருவர் தேயிலை தோட்டம் ஊடாக ஓடி­ய­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னை­விட பாப்­புவின் சடலம் காணப்­பட்ட இடத்­துக்கு அருகே கைவி­டப்­பட்ட ஒரு ஜோடி செருப்பு பொலிஸ் தட­ய­வியல் பிரி­வி­னரால் மீட்­கப்­பட்­டுள்­ளது.

மண்­ணி­ற­மான அந்த செருப்பு கொலை­யாளி அணிந்து வந்­த­தாக இருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

இதனால் ‘ரொனீ” எனப்­படும் பொலிஸ் மோப்­ப­நாயின் உத­வி­யுடன் விசா­ர­ணைகள் தேடல்கள் இடம்­பெற்ற போதும் பெரி­தாக சொல்லிக் கொள்ளும் அள­வுக்கு அவை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

எனினும் இது­வரை மேற்­கொண்­டுள்ள விசா­ர­ணை­க­ளுக்கு அமைய பாப்­புவை கொலை செய்­தவர் பெரும்­பாலும் உள்­ளூர்க்­கா­ர­ராக இருக்க வேண்டும் என்ற அனு­மா­னத்­துக்கு பொலிஸார் வந்­துள்­ளனர்.

அதா­வது கொட்­ட­கெத்­தன உள்­ளிட்ட சர்ச்­சைக்­கு­ரிய அதன் அண்­மைய கிரா­மங்­க­ளையும் உள்­ள­டக்கி 3000 பேரிடம் பெற்ற வாக்­கு­மூ­லத்­துக்கு அமை­வா­கவே பொலிஸார் இந்த ஊகத்­துக்கு வந்­துள்­ளனர்.

பாப்பு கொலை­யுண்ட நாள் அதற்கு முன்­னைய பின்­னைய நாட்­களில் கொட்­ட­கெத்­த­ன­வுக்குள் யாரும் புதி­தாக வந்து குடி­யி­ருக்­கவோ அவ்­வூ­ரி­லி­ருந்து தலை­ம­றை­வா­கவோ இல்லை என்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­துள்ள நிலையில் கொலை­யாளி ஊருக்குள் இருக்கும் ஒரு­வ­ராக இருக்கக் கூடும் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

கடந்த காலங்­களில் கொட்­ட­கெத்­தன மர்மக் கொலை­க­ளுடன் தொடர்­பு­டை­ய­தாகக் கூறி பலர் கைது செய்­யப்­பட்­டனர்.

மேல் நீதி­மன்றில் வழக்கும் தொட­ரப்­பட்­டது. நீதி­மன்றால் சிலர் வழக்­கி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­ட­துடன் சில சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை தொடர்­கின்­றது.

உண்­மையில் கொட்­ட­கெத்­தன என்­பது ஒரு மூடப்­பட்ட ஊர். அந்த ஊரில் வாழும் பெரும்­பா­லானோர் சாதா­ரண பொரு­ளா­தார நிலை­மையைக் கொண்­ட­வர்கள்.

கொட்­ட­கெத்­த­ன­வுடன் சேர்ந்து மேலும் பல ஊர்கள் அங்கு வியா­பித்­துள்­ளன. வரா­பிட்­டிய, நில­துர, ஓபாத்த, திம்­புல்­வல என அவற்றை அடை­யா­ளப்­ப­டுத்­தலாம்.

கடந்த 8 ஆண்­டு­க­ளாக இடம்­பெறும் மர்மக் கொலைகள் கொட்­ட­கெத்­தன மற்றும் அத­னுடன் ஒட்­டி­யுள்ள நான்கு கிரா­மங்­களை அண்­மித்தே நடந்­துள்­ளன.

கொட்­ட­கெத்­தன முத­லா­வது பெண் கொலை கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி நடந்­தது. அன்று முதல் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை­யி­லான 4 வருட காலப்­ப­கு­திக்குள் 8 பெண் கொலைகள் இடம்­பெற்­றன.

2008 ஆம் ஆண்டு இரு கொலை­களும் 2010 ஆம் ஆண்டு இரு கொலை­களும் 2011 ஆம் ஆண்டு 4 கொலை­களும் இவ்­வாறு இடம்­பெற்­றி­ருந்­தன. 2009 ஆம் ஆண்டு எவ்­வி­த­மான கொலை­களும் கொட்­ட­கெத்­த­னவில் பதி­வா­க­வில்லை.

எனினும் 2012 ஆம் ஆண்டு முதல் இக் கொலைகள் புதி­ய­வ­டி­வ­மெ­டுத்­தன. அதா­வது இது­வரை தனித்­த­னி­யாக இடம்­பெற்ற பெண் கொலைகள் 2012 ஆம் ஆண்டு ஜன­வரி 31 ஆம் திகதி நயனா நில்­மினி, காவித்யா சத்­து­ரங்­கனீ ஆகிய தாயையும் மக­ளையும் கொன்ற­த­னூ­டாக இரட்டைக் கொலை­க­ளாக பதி­வாகத் தொடங்­கி­யது.

அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி மற்­றொரு இரட்டைக் கொலை இடம்­பெற்­றது. அதனைத் தொடர்ந்து அதே­யாண்டு ஜூலை 18 ஆம் திகதி மற்­றொரு இரட்டைக் கொலையும் பதி­வா­னது.

2013, 2014 ஆம் ஆண்­டு­களில் அமை­தி­யாக இருந்த கொட்­ட­கெத்­தன பிர­தே­சத்தில் மீண்டும் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 15 ஆம் திகதி தமிழ்ப் பெண்­ணொ­ருவர் வெட்டிப் படு­கொலை செய்­யப்­பட்டார்.

Eratenapure

சந்­தி­ராணி சுவர்­ண­லதா

அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி சந்­தி­ராணி சுவர்­ண­லதா என்­பவர் வெட்டிக் கொலை செய்­யப்­பட்டு ஓடையில் வீசப்­பட்­டி­ருந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

அதனை அவ­ரது இரண்­டா­வது மகனே செய்­த­தாக அவரே ஒப்­புதல் வாக்­கு­மூலம் வழங்­கி­யுள்ள நிலையில் அது தொடர்­பி­லான வழக்கு தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றது.

இந்­நி­லையில் தான் தற்­போது நாதன் பாப்பு படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

கொட்­ட­கெத்­த­னவில் ஏன் இப்­படி தொடர்ச்­சி­யாக முடி­வின்றி பெண்கள் படு­கொலை செய்­யப்­ப­டு­கி­றார்கள் என்­பதை கண்­ட­றிய வேண்­டி­யது மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.

ஆரம்­பத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாவனை கும்­ப­லுடன் தொடர்­பு­ப­டுத்தி இந்த விவ­காரம் பேசப்­பட்­டது.

எனினும் கொட்­ட­கெத்­த­னவின் பல கொலைகள் தொடர்பில் சந்­தேக நபர்கள் பலர் கைதான போதும் பெண் கொலைகள் மட்டும் நின்­ற­பா­டில்லை.

இதனால் இப்பெண் கொலைகள் பலவும் ஒரே நபரால் அல்­லது குழுவால் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றதா? அப்­ப­டி­யானால் அவர் அல்­லது அவர்கள் இன்றும் சுதந்­தி­ர­மாக திரி­கி­றார்­களா? என்ற சந்­தேகம் தவிர்க்க முடி­யா­தது.

இதற்­கு­ரிய பதிலை தர யாரும் முன்­வ­ராத போதும் கொட்­ட­தென்ன தொடர்­பி­லான விசேட விசா­ர­ணை­யொன்றை முன்­னெ­டுத்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்­த்தன (தற்­போது வர்த்­தகர் ஒரு­வரை கடத்திக் கொன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ளார்.) பிரதான சந்தேக நபர் தொடர்பிலான வெளிப் படுத்தல்களை செய்துள்ளார்.

இந்த விவகாரத்தை விசாரணை செய்த அதிகாரி என்ற ரீதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன சொல்வதை அப்படியே நிராகரித்துவிட முடியாது.

வாஸ் குணவர்த்தனவின் விசாரணை தகவல்களின் படி கொட்டகெத்தனவில் இடம்பெற்ற 14 கொலைகளிலும் ஒரே குழுவே சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

‘இதில் வாஸ் குணவர்த்தன’ பிரதான சந்தேக நபராக ஒருவரை சண்டியரை பெயரிட்டுள்ளார். எனினும் குறித்த நபர் இதுவரை பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என்பதுடன் அவர் இப்போது எங்கு எப்படி உள்ளார் என்பதையே அறிய முடியாதுள்ளது.

இந்நிலையில் கொட்டகெத்தனவில் இந்த ஆண்டு மீண்டும் தலைதூக்கியுள்ள பெண் கொலைகள் தொடர்பில் இன்னும் ஆழமான விசாரணைகள் அவசியமாகும்.

அப்போதுதான் தொடரும் கொலைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து கொட்டகெத்தன என்றாலே பெண்களும் ஏற்படும் பயத்தை நீக்க முடியும்.

Share.
Leave A Reply

Exit mobile version