விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.
இப்போது நாம் ஒரு புதியவரைத் தரிசிப்போம். இன்றுவரை இவரை மையமாக வைத்து ஒரு பக்தி உலகமே சுழன்று வருகிறது.
இவர் எழுதியது என்ன? செய்தது என்ன?-உபதேசித்தது என்ன? இதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ இவரையே தெய்வமாக வழிபடும் ஓர் ஆன்மீக உலகம்தான் அது.
இவரைப் பின்பற்றும் சீடர்களும் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீடர்கள் இருக்கிறார்கள். ஆன்மீக உலகில் இவரை மையமாக வைத்து ஸ்தோத்ரங்கள் மட்டுமல்ல கோஷங்களும்கூட, எழுந்து கொண்டிருக்கின்றன.
யார் இவர்? கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவு போனால் ஆல்வே… அங்கிருந்து கொஞ்சம் திரும்ப வந்தால் அங்கமாலி என்கிற ஊர்.
அங்கமாலியிலிருந்து சில பல காலடிகள் எடுத்து வைத்து நடந்தால் வருவதுதான் காலடி… தற்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே பிரச்சினைகள் எழும்பியிருக்கும் ‘பெரியாறு’ நதி அழகாக காலடி வழியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இயற்கை செழிப்பான இந்த காலடியில்…ஷிவகுரு எனும் பிராமணர் இவருக்கு ஆரியம்பாள் எனும் பத்தினி இவர்களுக்கு மகனாக பிறந்த செழுமை பூமியில் தன் மழலை காலடிகளைப் பதித்தான் சங்கரன்.
காலடியே இவனைக் கண்டு துள்ளிக் குதித்தது. ‘அழகான குழந்தை… கண்ணைப் பாருங்கள். ஞானம் சிரிக்கிறது. காதுகள் பாருங்கள் உலகத்தையே கேட்பது மாதிரி விரிந்திருக்கிறது.’ என பார்த்த ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் சங்கரனுக்கு திருஷ்டி வைத்தார்கள்.
அப்பாவும்… அம்மாவும் சங்கரனைப் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாயிருக்க.. ஆனந்தம் அக்குடும்பத்துக்கு நிரந்தரமாய் நீடிக்கவில்லை. சங்கரன் சிறு குழந்தையாய் இருக்கும் போதே அவனது அப்பா இறந்து விட்டார்.
அதுவரை அக்குடும்பத்தை கொஞ்சிக் கொண்டிருந்தவர்கள்… கொஞ்சம் கொஞ்சமாய் விலகத் தொடங்கினர். விதவையாய் போன சங்கரனின் அம்மாவை பார்த்தாலே பாபம் என சாஸ்திர சாலையில் நடந்து போனார்கள்.
சங்கரனின் குடும்பம் ஏழ்மையில் விழுந்தது.ஆனாலும்… சங்கரனின் ஞானத்தேடலுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை அவனது அப்பா.
அவனது வயிற்றுப் பசியையும் போக்கி… அறிவுப்பசிக்கும் பல்வேறு சாஸ்திர பண்டிதர்களிடம் சேர்த்து படிக்க வைத்தாள்.
உள்ளூர் பண்டிதர்களிடம் படித்துக் கொண்டிருக்கும் போதே 8 வயதில் சங்கரனுக்கு உபநய சடங்கை செவ்வனே செய்து வைத்தார்கள்.இதன்பிறகு சங்கரனின் சாஸ்திர தேடல் வீரியம் கொண்டது.
அம்மாவிடம் ஒருநாள் சங்கரன் சொன்னான். “அம்மா… உள்ளூர் பண்டிதர்களிடம் படித்தது போதும் அம்மா… நர்மதா நதிக்கரையில் சில பண்டிதர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர்களிடம் பயில்கிறேனே…”
அம்மாவிடம் சொல்லி விட்டு…பெரியாறு நதிக்கரையிலிருந்து நர்மதா நதிக்கரைக்கு பயணம் செய்தான் சங்கரன்.
அறிவு நதியில் குளிப்பதற்காக, மூழ்குவதற்காக, நர்மதா நதிக்கரையில் கோவிந்த பாதர், பத்மபாதர், கவுடபாதர் போன்ற வித்வான்களிடம் அங்கேயே வாசம் செய்து கற்ற சங்கரர்… அங்கே பல விடயங்களைத் தெரிந்து கொண்டார்.அவர்கள் உபதேசித்த விடயங்களை உள் வாங்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்.
சங்கரர் கற்ற வேதம், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம் போன்றவற்றுக் கெல்லாம் பாஷ்யம் அதாவது உரை எழுதிய சங்கரர்… அப்போது புத்தரையும் வாசிக்க ஆரம்பித்தார்.
அதுவரை அவர் படித்த வேதம்.. பிரம்ம சூத்ரம், ஆகியவற்றை பற்றியெல்லாம் சங்கரரை மறுபரிசீலனை செய்ய வைத்தது புத்தம்.
புத்தன் சங்கரருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். மறுபடியும் மற்ற சாஸ்திரங்களையும் வாசிக்கத் தொடங்கிய சங்கரர்.. இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார்.
நம் பிறப்பு பொய்.. வாழ்வு பொய் இவ்வுலகத்தில் ஞானம். அக்ஞானம் ஆகிய இரண்டும்தான் உண்டு, மற்ற எதுவுமே கிடையாது” என தனக்கு கிடைத்த ஞானத்தை ஊருக்கெல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சங்கரர்.
வேதம் அது சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய் கடவுளைத் தவிர… என சங்கரர் மேலும் உபதேசம் செய்யச் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர்.
இதெல்லாம் சங்கரரின் இளமைக்காலம். ஆண் பொய், பெண் பொய் அனைவரும் பொய் என்ற சங்கரர் கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் மறுத்தார்.
அம்மா எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இளமை பொங்கும் வயதில் சந்யாசம் போனார். தான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட உலகையே மாயம் என ஒப்புக் கொள்கிற இளைஞர்களை திரட்டினார் சங்கரர்.
அவருக்கு முதன் முதலில் கிடைத்தவர்கள் நான்குபேர். ஆனந்தகிரி, சுரேஷ்வரன், பத்மநாபர், ஹஸ்தாமலகம். இவர்கள் தன்னை பின்தொடர ஒவ்வொரு ஊராய் சென்றார்.
உலகமே மாயம் எதுவுமே உண்மையில்லை. எதற்கும் கலங்காதே… தனது அத்வைதத்தை ஊர் முழுக்க பரப்பினார் ஆதிசங்கரர்…‘எல்லாமே பொய்… எதுவும் மெய்யில்லை’ என அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த ஆதி சங்கரரை அந்த சம்பவம் அழுத்தமாக உலுக்கியது. –
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு. (இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 12)
இவற்றையும் பார்வையிடவும்..
அட ஆபாசமே.! இதுவா தமிழ்வருடப் பிறப்பு?
அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள். படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.
இதுவா தமிழ்வருடப் பிறப்பு?
நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,
அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என் உடன்பட்டுத்தான் (60,000) வீடுகளிலும் பார்த்து, கண்ணன் இல்லா வீடு கிடைக்காததினால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மய்யல்கொண்டு, அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றனர்.
கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர்.
இவளுடன் கண்ணன் அறுபது வருஷம் ( புணர்ந்தது )கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்.
2. (6). பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள். சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள், பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம். —— ஆதாரம்: “அபிதான சிந்தாமணி” பக்கம் 1392
தமிழ்ப் புத்தாண்டா? நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு? அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ???
பகீரதன் தெரியும் அல்லவா? பெரிய தவம் செய்தானே. அந்தத் தவச் சிற்பம் கூட மாமல்லபுரத்தில் உள்ளதே. அவன் தான் பெண்ணுக்கும், பெண்ணுக்கும் பிறந்தவன்.
இவன் செய்த தவம்தான் அந்தரத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆகாச கங்கையைத் தரைக்கு வர வைத்தது. அதன் காரணமாகத்தான் கங்கை நதி வட நாட்டில் ஓடுகிறது.
பிறப்பு மாதிரியே அவனது சாதனைகளும் கூட அறிவிற்கு அப்பாற்பட்ட கதைதான்.
அயோத்தியில் ஓர் அரசன். இராமனுக்கு முந்தியா, பிந்தியா தெரியவில்லை. அவனுக்கு இரண்டு தங்கைகள். இருவரும் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். ஒன்றாகவே படுத்துத் தூங்குவார்கள்.
ஒருவரோடொருவர் அணைத்தவாறு நித்திரை கொள்ளும் போது ஒருத்திக்குக் கர்ப்பம் உண்டாகிப் பிள்ளையும் பிறந்துவிட்டது. அந்தப் பிள்ளைதான் பகீரதன். இதை மருத்துவ உலகு Sapphism என்கிறது.
ஆனால், இதனால் கருத்தரிக்கும் என மருத்துவ அறிவியல் கூறவில்லை.
அர்த்தமுள்ள இந்துமதம் கூறுகிறது. இதிலும் சுக்கில சுரோணிதம் கிடையாது. சுரோணிதம் மட்டுமே உண்டு.
படைப்புக் கடவுள் பிரம்மா. அதற்கு அப்பா நாராயணன். இதன் தொப்புளில் இருந்து புறப்பட்டு நிற்கும் தாமரைப் பூவில் உட்கார்ந்திருக்கும்.
இந்த நிலையில், இதன் மகன் நாரதனாம். கலகம் செய்யும் கதாபாத்திரமாக இந்து மதக் கதைகளில் வரும். ஆக, நாராயணனின் மகன் பிரம்மாவின் மகன் நாரதன்.
நாராயணனுக்குப் பேரன். நாராயணனின் கீழிறக்கம் (அவதாரம்) கிருஷ்ணன். பெண் லோலன். எல்லாப் பெண்களும் கிருஷ்ணனையே சுற்றிச் சுற்றிச் சுகம் காண்கிறார்கள்.
அப்படி ஒரு கவர்ச்சி எப்படி வந்தது கிருஷ்ணனுக்கு என்று சந்தேகம் நாரதனுக்கு. கிருஷ்ணனிடம் கேட்கிறான் – எனக்கும் ஒரு பெண் வேண்டும் என்று.
கிருஷ்ணன் சொன்னானாம், எங்கே நான் இல்லையோ, அங்கே நீ போய்க் கொள் என்று. நம்பிய நாரதன் நாயாய் அலைந்ததாம். பேயாய்த் தேடியதாம்.
எங்கும் தனியாகப் பெண் இல்லவே இல்லையாம். எல்லா இடத்திலும் கிருஷ்ணன் சல்லாபித்துக் கொண்டே இருந்தானாம். அலுத்துப் போய் நாரதன் கிருஷ்ணனிடம் வந்து அப்படி என்னதான் இருக்கிறது, உன்னிடம் என்று கேட்டதாம்.
நாரதனுடன் கலவி செய்து, காட்டியதாம் கிருஷ்ணன். கலவியின் விளைவாக ஒன்றல்ல, இரண்டல்ல, அறுபது பிள்ளைகள் பிறந்தனவாம். அவை தாம் பிரபவ முதல் அட்சய வருடம் வரை பெயர் கொண்ட வருடங்களாம். ஆமாம், தமிழ்ப் புத்தாண்டுகளின் பெயர்களாம்!
ஒன்று கூடத் தமிழ்ச் சொல் இல்லை! எப்படி இவை தமிழ்ப் புத்தாண்டு?
பிறக்கப் போவது – சர்வஜித்! போன சர்வஜித்தில் பிறந்தவருக்கு இப்போது 60 வயது. மணிவிழா ஆண்டு. ஆளைப் பார்த்தால் வயது புரிந்துகொள்ளலாம். பார்க்காமலே சர்வஜித் ஆண்டில் பிறந்தேன் என ஒருவர் கூறினால், அவரின் வயதை எப்படிக் கணக்கிடுவது?
ஒரு வயதுக் குழந்தை என்பதா? 60 வயது மணி விழாக்காரர் என்பதா?
இவ்வளவு குழப்பமாகவா அறிவிற்சிறந்த தமிழ்ச் சமூகம் ஆண்டுக் கணக்கை வைத்துக் கொண்டிருக்கும்? இந்து தான் வைத்துக் கொண்டிருப்பர். நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு? – SOURCE: – “ viduthalai.”