அஸ்திரியாவில் நடைபெறும் சர்வதேச மீசை மற்றும் தாடி வைத்திருப்போருக்கான போட்டிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வித்தியாசமான அலங்காரத்துடன் குவிந்துள்ளனர்.

வித்தியாசமான மீசை மற்றும் தாடி வைத்திருப்பவர்களுக்கான சர்வதேச மீசை மற்றும் தாடி சாம்பியன் போட்டி கடந்த 1990ஆம் ஆண்டு முதன் முதலில் நடத்தப்பட்டது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் வித்தியாசமான அலங்காரம் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் ஆண்டு தோறும் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரியாவின் லியொகேங் பகுதியில் உள்ள அல்பைன் கிராமத்தில் இந்த ஆண்டுக்கான சர்வதேச மீசை மற்றும் தாடி சாம்பியன்சிப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் கலந்துகொள்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் குவிந்துள்ளனர். போட்டியாளர்கள் தங்களின் வித்தியாசமான மற்றும் விசித்திர மீசை மற்றும் தாடி மூலம் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

beard-Leogang-hat_3463620k

Share.
Leave A Reply

Exit mobile version