பிரபாகரன் அழிந்து போனதில் காபூலின் பங்கு…..!! 2008 டிசம்பர். எல்லாம் வழமை போலவே இயங்கிக் கொண்டிருந்தன. செக்யுரிட்டி ரிப்போர்ட் “கிறீன் ஸ்னோன் நோர்மல் சிட்டிவேஷன்” என காலையில் வழமை போல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸோ எல்லாமே வழமை போல் இயங்கிக் கொண்டிருந்தன காபூலில். நேட்டோ கரவன் ஒன்று புறப்பட்டு சென்ற போது திடீரென ஒரு குண்டு வெடித்தது.
சூசைட் அம்புஸ். கூடவே பரவலான துப்பாக்கி சூடுகள். விஷேட கொமாண்டோக்கள் கவர் எடுத்து சூடு வந்த திசையை அவதானித்து சிக்னல் பயர் பண்ணிய போது பதில் இல்லை.
இப்போது வெரிபையிங் சிட்டிவேஷன் கொன்போர்ம்.
தாக்குவது தலிபான்கள். துப்பாக்கி ஒலி வந்த திசையை நோக்கி கொமோண்டோக்கள் தாக்குதல் நடாத்த ஆரம்பித்தனர்.
திடீரென ஒரு அலறல் சத்தத்துடன் அவர்கள் மேல் ஒரு நபர் பாய்ந்தார் பின்புறம் இருந்து. சுதாரித்து கொண்ட கொமாண்டோஸ் அவரை மடக்கி பிடித்து விட்டனர்.
அவர்களிற்கு தெளிவாகவே தெரியும் அவர் ஒரு தற்கொலை தாக்குதல்தாரியென்று. கைது செய்யப்பட்டவர் பெக்ராம் பேஸிற்கு சில மணி நேரங்களில் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
இன்டரகேசன் ஆரம்பமானது. அவர் தலிபான் தற்கொலை தாக்குதல் போராளி.
டெடனேட்டர் (tetanettar) சமயம் பார்த்து ஸ்பார்க் (Spark) ஆகாததனால் குண்டு வெடிக்கவில்லை.
அல்லது கொமாண்டோக்களும் காலி. எக்ஸ்புளோஸிவ் ஸ்பெஷலிஸ்ட் அவரது உடலில் இருந்து வெடிகுண்டுகளை டிஸ்மேண்டில் பண்ணியிருந்தார்கள்.
அவை இன்டரகேசன் ஒபிஸர் முன்னுள்ள மேசையில் வைக்கப்பட்ட போது அவர் ஒரு கணம் கதிரையின் பின்புறம் சாய்ந்தே விட்டார்.
ஏற்கனவே அவர் மேசையில் குண்டு வெடிப்பு பற்றிய பைனல் ரிப்போர்ட் இருந்தது. ரோல் எடுத்திருந்தார்கள். கசுவலிட்டி ரிப்போர்ட்டும் இணைக்கப்பட்டிருந்தது.
இப்போது அவரிற்கு குண்டு வெடிப்பில் ஏற்பட்ட சேதங்களின் வீரியத்தன்மை எதனால் நிகழ்ந்தது என்பது மெல்ல புரிய ஆரம்பித்தது.
அது புரிய புரிய அவரது கைகள் தனது ஹையர் ஒபிசர்களின் தொலை பேசி எண்களை தட்ட ஆரம்பித்தது. இரு மணிநேரத்தில் சில சீஃப் அமெரிக்கன் ஆர்மி ஒபிஸர்கள் அங்கு குழுமியிருந்தனர்.
கூடவே இரண்டு C.I.A. ஒபிஸர்கள். தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு வழக்கமாக பயன்படுத்துவது TNT அல்லது C4 பேஸ் எக்ஸ்புளோஸிவ் மெட்டீரியல்களை.
இம்முறை வெடித்த குண்டு RDX பேஸ் பிளாஸ்டிக் மெட்டீரியல்கள். விலை கூடிய சரக்கு.
அவர்கள் கரங்களிற்கு கிடைக்க வாய்ப்பும் இல்லாதது. பின் எப்படி அதனை அவர்கள் உபயோகித்தார்கள்?
அந்த கேள்வி அவர்களின் புருவங்களில் வளைவுகளை வரைந்த போது இரண்டாவது கேள்வி எழுந்தது. கைதுசெய்யப்பட்ட போராளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட எக்ஸ்புளோஸிவ் ஜெக்கட் வியப்பாக இருந்தது.
“பெல்ட் டைப்”. கொம்பேக்ட் சைஸ். செக்கியூரிட்டி செக்கப்களில் பெரிதாக தெரியாத அமைப்பு. வழக்கமாக தலிபான்கள் பாவிக்கும் செஸ்ட் கிட் அல்ல அது. ஸ்லிம் பெல்ட் டைப். இரண்டு பட்டிகள் கொண்டது. டெனிம் மெட்டீரியலில் ஸ்டிச் செய்யப்பட்டது. உள்ளே ஆர்.டீ.எக்ஸ். வித் மெட்டல் போல்ஸ்.
ஆச்சரியங்கள் ஆரம்பமாகின் அமெரிக்கர்களிற்கு. போராளிக்கு யார் இதனை தந்தார்கள் என்பதெல்லாம் தெரியாது. அவரது கொமாண்டர் தந்தது. அதனை தவிர வேற எந்த இல்மும் அவரிற்கு கிடையாது.
மறு நாள் பசுபிக் ரிஜனல் கொமாண்டின் சிப்பில் இருந்து ஒரு தகவல் வருகிறது. இந்த எக்ஸ்புளோசிவ்வை பாவிப்பவர்களும் ஸிலிம் பெல்ட் டெக்னோலொஜியை பயன்படுத்துபவர்களும் இலங்கையில் ஈழ தேசத்தை உருவாக்க போராடும் Liberation Tigers என்பதே அது.
எல்லை கடந்த பயங்கரவாதம் என்ற வகையில் பாரத பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா படுகொலை என இந்திய மண்ணிலேயே LTTE சில தாக்குதல்களை நடாத்தியிருந்தது.
இப்போது அது ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தது. நாளை வசிரிஸ்தான் வரைக்கும் செல்லும். நாளை பக்தாத்.
ஆப்கனாில் தொடர்ந்து வெடித்த குண்டுகள் இதே போர்முலாவில் நிகழ ஆரம்பித்தன. தேடிப்பார்த்ததில் புலிகளது இன்டர்னேஷனல் டெரரிஸம் ட்ரேடிங் கொன்போர்ம் அமெரிக்காவிற்கு.
இதற்கு மேல் முடிவு எடுக்க சீ.ஐ.ஏ.யிற்கு முடியாது. பென்டகன் வசம் பைல்கள் பாரம் கொடுக்கப்பட்டன.
இனி என்ன எக்ஸகட்டீவ் டிசிசன் மட்டுமே பாக்கியாக இருந்தது. LTTE அழிக்கப்படல் வேண்டும் என்பதில் இலங்கை அரசு, அதன் இராணுவம், இந்திய அரசு, ஏனை சக தமிழ் போராளி அமைப்புக்கள் உறுதியாக இருந்தன.
இப்போது அந்த முடிவிற்கு செயலுருவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கும் வந்து விட்டது. ஈழப் போரின் இறுதி முடிவு எழுதப்பட்டதில் இந்த விவகாரமும் ஒன்று.
ஆனால் இந்த விவகாரம் மீடியாக்களில் எழுதப்படாததாகவே இருந்து விட்டது. வழக்கமான பாணியில், இறுதி யுத்தத்தின் கடைசி நாட்களில் உங்களை காப்பாத்த இரண்டு அமெரிக்கன் அப்பாச்சி ஹெலிக்கப்டர்கள் முள்ளிவாய்க்காலிற்கு வரும், உங்கள் போராளிகளை மீட்டுச் செல்ல பிலிப்ஸ் -2 கப்பல் வரும் என்று சொல்லியே அவர் கதையை முடித்து விட்டது அமெரிக்கா.
புலிகளை அழிப்பதற்கு உதவிய புலம்பெயர் அமைப்புக்களும் போர்க்குற்ற விசாரணையும்