ரோல்ஸ்ராய்ஸ் கார் என்றாலே ஆடம்பரம், அந்தஸ்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. உலகின் விலையுயர்ந்த கார் மாடல்களாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், பெரும் செல்வந்தர்கள் தங்களுக்கான பிரத்யேக அடையாளம் மற்றும் தனித்துவம் வேண்டி சில ரோல்ஸ்ராய்ஸ்களை பெரும் பொருட்செலவில் கஸ்டமைஸ் செய்து வாங்கியுள்ளனர்.
அதுபோன்று, உலகிலேயே அதிக விலை கொண்ட டாப் 15 ரோல்ஸ்ராய்ஸ் கார்களையும், அதன் சிறப்புகளையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
விலை: ரூ.54 கோடி (Price: $8.2 million) வளைகுடா பகுதியை சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் மத்தியில் தங்கம், வைரம் போன்றவற்றை காரில் பதித்து வாங்குவதை தங்களின் அந்தஸ்தாக கருதுகின்றனர்.அந்த விதத்தில், அடையாளம் தெரிவிக்க விரும்பாத வாடிக்கையாளருக்காக ரோல்ஸ்ராய்ஸ் வடிவமைத்து கொடுத்த கார் மாடல் இது. 120 கிலோ கட்டித் தங்கத்தை பல்வேறு விதங்களில் கார் முழுவதும் பயன்படுத்தி இழைத்துள்ளனர்.
இந்த விலை மதிப்பு மிக்க காருக்கு பாதுகாப்பு அம்சம் இருக்கும் விதத்தில், குண்டு துளைக்காத வசதிகள், பிரத்யேக துப்பாக்கி பொருத்தப்பட்டு கஸ்டமைஸ் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசாங்கத்திடம் இருந்து சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளனர். முகப்பு க்ரில், கதவு கைப்பிடிகள், சக்கரங்கள், பனி விளக்குகள் என பல இடங்களில் தங்கத்தால் இழைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய மதிப்பில் ரூ.54 கோடி பெறுமானம் கொண்டது.
விலை மதிப்பு: ரூ.47.5 கோடி(Price: $7.25 million ) கடந்த 1904ம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனவர்களில் ஒருவரான சார்லஸ் ரோல்ஸ் எண்ணத்தில் உருவான கார் மாடல்.
மொத்தமாக 17 கார் மாடல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இந்த காரில் 10 எச்பி பவரை அளிக்க வல்ல 1.8 லிட்டர் எஞ்சின், 3 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. பல்வேறு உரிமையாளர் கையில் மாறினாலும், இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது.
03. 1912 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் கோஸ்ட் (1912 Rolls Royce Silver Ghost )விலை மதிப்பு: ரூ.19.80 கோடி (Price: $3 million) சாதாரண மாடல்களிலிருந்து இந்த பழமையான ரோல்ஸ்ராய்ஸ் கார் வேறுபடுவதற்கு, இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள்தான் காரணம். அலாய் வீல்கள், முன்பக்க க்ரில், சைடு மிரர்கள், புகைப்போக்கி குழாய் என பல இடங்களில் 24 காரட் தங்கம் பயனபடுத்தியிருக்கினறனர். உட்புறத்தில் கைப்பிடிகள், சென்டர் கன்சோல், ஏசி வென்ட்டுகளிலும் தங்கம் பயன்படுத்தியுள்ளனர்.
விலை மதிப்பு: ரூ.11.15 கோடி (Price: $1.6 million) எல்டன் ஜான் எய்ட்ஸ் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் விதத்தி்ல், இந்த கார் ஏலம் விடப்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில், காரின் உண்மையான மதிப்பை விட இருமடங்கு கூடுதல் விலைக்கு ஏலம் போனது.
05. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் இயர் ஆஃப் தி டிராகன் எடிசன் விலை (Rolls Royce Phantom ‘Year of the Dragon edition’ )
மதிப்பு: ரூ.7.92 கோடி (Price: $1.2 million) சீன மார்க்கெட்டிற்காக வெளியிடப்பட்ட மாடல். அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு மாதங்களில் விற்று தீர்ந்தது. 2012ம் ஆண்டு சீனாவின் டிராகன் ஆண்டின் நினைவாக இந்த காரை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டது.மேலும், சீன அரச குடும்பங்களின் அடையாளச் சின்னமாக பயன்படுத்தப்படும் டிராகன் என்ற கற்பனை விலங்கின் சின்னங்களை பல்வேறு இடங்களில் பொறித்து, சீன பாரம்பரியத்தை கொண்டாடும் விதத்தில், மிகவும் பிரத்யேகமான மாடலாக வெளியிட்டது.
06. பிஜன் பாக்ஸத் ஸ்பெஷல் எடிசன் (Bijan Pakzad special edition Rolls Royce Drophead coupe )
விலை மதிப்பு: ரூ.6.6 கோடி(Price: $1 million) ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல டிசைனர் பிஜன் பாக்ஸன் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட மாடல்தான் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் டிராப்ஹெட் கூபே மாடல். கடந்த 2010ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு, 2011ல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வித்தியாசமான மஞ்சள் வண்ணம், பிஜான் பாக்ஸத்தின் கையெழுத்துடன் வந்ததே இதன் சிறப்பு.
விலை மதிப்பு: ரூ.4.02 கோடி உலகின் அதிக விலை மதிப்பு கொண்ட அமரர் ஊர்தி இதுவாகத்தான் இருக்கும். சாதாரண ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரில் பல்வேறு மாறுதல்களை செய்து அமரர் ஊர்தியாக பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கியுள்ளனர். இந்த கார்23 அடி நீளம் கொண்டது. 2012ம் ஆண்டு தி டேன் எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அமரர் ஊர்வலத்துக்கு தேவைப்படும் பல்வேறு வசதிகளுடன் இந்த காரில் இருக்கின்றன.
08. ரோல்ஸ்ராய்ஸ் ஆல் கார்பன் ஃபைபர் ஃபான்டம் கூபே (Rolls Royce all-carbon fiber Phantom coupe)Price: $420,000 (estimate) : அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சிம்பாலிக் மோட்டார் கார் நிறுவனம், இந்த ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை பந்தய கார் போன்ற அம்சங்களுடன் மாறுதல்களை செய்தது. புதிய அலாய் வீல்கள், ஆட்டோ 4 கார்னர் லெவலிங் சிஸ்டம், பவர் டோர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் விஆர்7 பாதுகாப்பு தர நிர்ணயங்களுக்கு இணையான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. குண்டு துளைக்காத கண்ணாடிகள், வலிமையான பாடி பேனல்கள், ரன் ஃப்ளாட் டயர்கள் என பல்வேறு சிறப்பம்சங்களை கொணடது. 10 அடி தூரத்திலிருந்து ஏகே-47 துப்பாக்கியால் சுட்டாலும், பாதிப்பு ஏற்படாது. விலை விபரம் வெளியிடப்படவில்லை. Show Thumbnail
10 புரொஜெக்ட் கான் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் (Project Kahn Rolls-Royce Phantom)
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கார் கஸ்டமைஸ் நிறுவனமான கான் டிசைன்ஸ் நிறுவனத்தில் உருவான மாடல். பியர்ல் ஒயிட் என்ற வெள்ளை வண்ணத்தில் கிளாசி ப்ளாக் என்ற பிரத்யேக கருப்பு நிற க்ரில் கொடுக்கப்பட்டு மிகவும் சிறப்பாக மாற்றப்பட்டு இருக்கிறது. 22 இன்ச் சில்வர் வண்ண அலாய் வீல்களும் காருக்கு சிறப்பு சேர்க்கிறது. விலை மதிப்பு வெளியிடப்படவில்லை.