வீதியில் கைவிடப்பட்டிருந்த, பிறந்து 17 நாட்களேயான சிசுவை பேராதனை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (6) மாலை மீட்டுள்ளதுடன் சிசுவுக்கு அருகில் காணப்பட்ட கடிதமொன்றையும்; கண்டெடுத்துள்ளனர்.
பெண்ணொருவர் வழங்கிய தகவலை தொடர்ந்து பேராதெனை, தங்கொல்ல சந்தியில் இருந்து இச்சிசு மீட்கப்பட்டது.
கடிதத்தில், தமக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் குழந்தை பிறந்து 17 நாட்களே ஆவதாகவும் அதனை வளர்த்தெடுப்பதற்கு பொருளாதார பிரச்சினை இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாத எவருக்கேனும் இச்சிசுவை ஒப்படைக்கமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சிசுவின் தந்தை கூலித் தொழிலாளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிசு தற்போது பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிசு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.