மும்பை: நடிகை ஸ்ரீதேவிக்கு இரு மகள்கள். இவர்களில் யார் சினிமாவில் நடிக்க வரப் போவது என்று பட்டிமன்றம் நடத்தாதக குறையாக பலரும் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி மீடியாக்களில் பரபரப்பாக அடிபடுகிறார். குஷி சினிமாவில் நடிக்க வந்து விட்டாரோ என்று எண்ண வேண்டாம்.
மாறாக, அவரது புகைப்படம் ஒன்றுதான் பரபரப்பாக இணையதளங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. 3 மாதங்களுக்கு முன்பு வந்த படமாம் இது. ஆனால் இதை பலரும் ஷேர் செய்து டிரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர்.

07-1444198789-kushi-kapoor45

குஷி…
பாலிவுட் பட விழாக்களுக்கு ஸ்ரீதேவி வரும்போது கூடவே அவருடன் ஒட்டிக் கொண்டு வருபவர் குஷி. இவரைப் பற்றி அதிகம் செய்திகள் வெளியானதில்லை. இவரது சகோதரி ஜான்வி குறித்துத்தான் நிறைய செய்திகள் வருவது வழக்கம்.

முத்தப்படம்…
தற்போது அக்காவை முந்தி விட்டார் குஷி. காரணம், அவரது முத்தப் படம். அதாவது பாப் பாடகர் ஜேக் கிளின்ஸ்கி என்ற பாடகருக்கு அவர் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் படம்.
கிளின்ஸ்கி…
அமெரிக்கப் பாடகரான கிளின்ஸ்கிக்கு அவரது கன்னத்தில் குஷி முத்தம் தருவது போன்ற படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்தார். இது கிளின்ஸ்கி எடுத்த செல்பி படமாகும்.

ஆழமான முத்தம்…
இப்போது இந்தப் படம்தான் படு வேகமாக வைரல் ஆகியுள்ளது. கண்களை மூடி ஆழமாக முத்தமிடுகிறார் குஷி. இது இப்போது பரபரப்பாகியுள்ளது. இந்தப் படத்தைப் போட்டு பலரும் பலவிதமாக கருத்துக்களையும் தட்டி வருகின்றனர்.
கமெண்ட்….
அந்தப் படத்தைப் போட்டு “ஹேன்ட்ஸ் டவுன் ஒன் ஆப் தி பெஸ்ட் மொமன்ட்ஸ் ஆப் மை லைப்” என்றும் கமெண்ட் போட்டுள்ளார் குஷி.
ஸ்ரீதேவியின் கருத்து…
தனது மகள்களை நடிப்புக் களத்தில் கட்டாயப்படுத்தி தள்ளி விட மாட்டேன் என்று ஏற்கனவே ஸ்ரீதேவி கூறியுள்ளார். அவர்களுக்குப் பிடித்ததை அவர்களே தேர்வு செய்து கொள்ளட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் குஷியின் இந்த முத்தப் படம் சூடாக வலம் வருகி்றது.
இணையத்தை தெறிக்கவிடும் தலயின் வேதாளம் டீசர்(வீடியோ)

அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

லட்சுமி மேனன், அஸ்வின் கக்குமனு, தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஒரு சில காரணங்களால் டீசர் வெளியாவது தள்ளிப் போனது. எனவே, வரும் அக்டோபர் 8-ந் தேதி ‘வேதாளம்’ படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிக்கப்பட்டது.

அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘வேதாளம்’ படத்தின் டீசர் இரவு வெளியானது. டீசரை வைத்து பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் சரவெடியாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

டீசர் முழுவதும் அஜித் மட்டுமே ஆக்கிரமித்து மிரட்டுகிறார். டீசரில் அஜித் தெறிக்கவிடலாமா என்று கேட்கிறார். ஆனால் அவர் ரசிகர்கள் ஏற்கனவே இணையத்தை தெறிக்கடித்து வருகிறார்கள். டீசர் வெளியாகி ஒரு மணி நேரத்திலேயே 4 லட்சம் வீயூஸ்களை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.

படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version