எகிப்து நாட்டில் ஒற்றைக்கண் மற்றும் மூக்கு இல்லாமல் பிறந்த விநோத குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

எகிப்து நாட்டின் ஷென்பெல்லாவெய்ன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த இக்குழந்தை, அந்நாட்டின் புராண கதைகளில் வருவது போன்ற முகத்தோற்றத்துடன் ஒற்றைக்கண் மற்றும் மூக்கு இல்லாமல் பிறந்துள்ளது.

இக்குழந்தையை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான மருத்துவர்கள் இதுகுறித்து கூறியதாவது, கதிர்வீச்சின் வெளிப்பாடு கருவில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இக்குழந்தை இவ்வாறு பிறந்திருக்கலாம்.

இவ்வகை குறைபாட்டிற்கு Cyclopia என்று பெயர், இவ்வகை குறைபாடுகள் அதிகமாக விலங்குகளுக்கே ஏற்படும் என்றும் இந்த குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.

தற்போது, இக்குழந்தையும் இன்னும் சிறிது நாட்களுக்கே உயிர் வாழும் என்று தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version