லண்டன்: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய திருமண வீடியோ யூ டியூபில் வெளியாகியுள்ளது. பிங்க் நிறப்புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் சோனியா காந்தியும்(21), தனது டிரேட் மார்க் உடையில் மாப்பிள்ளையாக ராஜீவ் காந்தியும்(23), உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்து கொள்ளும் வீடியோ, பிரிட்டிஷ் மூவிடோன் என்ற யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய ஆவணமாக கருதப்படுகிறது.