நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாருக்கு எதிரணியில் இருக்கும் விஷாலை ‘நீ யார்.. உன் நோக்கம் என்னன்னு தெரியுன்டா’ என ஒருமையில் திட்டினார் நடிகர் சிம்பு.

நடிகர் சங்கத் தேர்தல் குறித்து சரத்குமார் அணியைச் சேர்ந்த சிம்பு, ராதிகா ஆகியோர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிம்பு ஆவேசமாகப் பேசினார்.

அவர் பேச்சு: தயாரிப்பாளர் சங்கம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு சமரசமும் வராது என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

மொத்த பிரச்சினையுமே சுமுகமாக முடியக்கூடிய சூழ்நிலையில் இல்லை. அவர்களுடைய (விஷால்) எண்ணமே, இந்த நடிகர் சங்கத்தை உடைக்க வேண்டும் என்பது தான்.

தயாரிப்பாளர் சங்கம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு சமரசமும் வராது என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

மொத்த பிரச்சினையுமே சுமுகமாக முடியக்கூடிய சூழ்நிலையில் இல்லை. அவர்களுடைய (விஷால்) எண்ணமே, இந்த நடிகர் சங்கத்தை உடைக்க வேண்டும் என்பது தான்.

விஜயகாந்த் சார் தலைவராக இருந்த நேரத்தில் என்னுடைய 16 வயதில் இருந்தே நடிகர் சங்கத்தில் இருக்கிறேன்.

 

இப்போது சொல்கிறேன், எனக்கு எந்த ஒரு பதவியும் வேண்டாம், நான் இந்த தேர்தலில் நிற்பதாகவே இல்லை. எனக்கு இது தேவையும் கிடையாது.

என்னுடைய நடிகர் சங்க குடும்பத்தில் உடன் இருப்பவர்களே என்னை விரோதி மாதிரி பார்க்கும் பார்வையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு பதவியும், இடமும் எனக்கு தேவையில்லை.

ஆனால், சரத்குமார் அணி மீது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.

நடிகர் சங்க கட்டிடம் விவகாரம் தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் சொல்லி அனைவருக்கும் கையெழுத்திட்ட உடனே தான் இந்த முடிவை எடுக்கிறார்கள்.

என்னுடைய கேள்வி என்னவென்றால், அன்றைய கூட்டத்தில் நீங்க (விஷால்) ஏன் கேள்வி கேட்கவில்லை. அன்றைக்கு நீங்கள் எல்லாம் எங்கு இருந்தீர்கள்.

இன்றைக்கு கேள்வி கேட்பவர்கள் எல்லாம் அன்றைக்கு ஏன் வரவில்லை. ஏன் நடிகர் சங்கத்தின் மீது உங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த கூட்டத்துக்கு ஏன் நீங்கள் வரவில்லை, நடிகர் சங்கத்தை என்றைக்காவது திரும்பி பார்த்திருக்கிறீர்களா?.

கட்டிட இடத்தில் தியேட்டர் வர வேண்டும் என்று சொல்லவில்லை. அங்கு என்ன வேண்டுமானாலும் வரட்டும். திரையரங்கத்துக்கு போட்ட ஒப்பந்தத்தில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்கள்.

அங்கு திரையரங்கம் வரக்கூடாது என்றால் க்ளப் வரணுமா.. பார் வரணும்னு நினைக்கிறியா? உன்னுடைய குறிக்கோள் தான் என்ன?

திரையரங்கில் உன்னோட படம் வெளியாகி மக்களிடையே முகம் தெரிவதால் தான் பேசுகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

Vishal speech at press meet for Nadigar Sangam Election Player 1

Share.
Leave A Reply

Exit mobile version