நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் இருக்கும் ஹில்லாரி கிளிண்டன் தனது கணவர் பில் கிளிண்டனை அடித்து உதைப்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஹில்லாரி கிளிண்டன். அவர் தனது பிரச்சாரத்தை துவங்கி மக்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்நிலையில் அரசியல் கொள்கை வகுப்பாளரான ரோஜர் ஸ்டோன் என்பவர் தி கிளிண்டன்ஸ் வார் ஆன் விமன் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அந்த புத்தகம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஸ்டோன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

08-1444285638-hillary-clinton

ஹில்லாரி
ஹில்லாரி கிளிண்டன் உண்மையில் கோபக்காரர். அவர் உலக மக்களுக்கு முன்பு தான் அமைதியான, சாந்தமான பெண் என்பது போன்று வேஷமிடுகிறார்.
கோபம்
ஹில்லாரிக்கு கோபம் வந்தால் அவரது கணவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான பில் கிளிண்டன் மற்றும் ஊழியர்களை திட்டுவார். ஏன், பல சமயம் பில் கிளிண்டனை தாக்கியுள்ளார்.
பில் கிளிண்டன்
ஹில்லாரி பில் கிளிண்டனுன் சண்டை போடுவார். பல சமயங்களில் கோபத்தில் பில் மீது பொருட்களை வீசுவது, அவரை நகத்தால் கீறுவது, அடிப்பது என்று கொடுமைப்படுத்தியுள்ளார். கணவரை கன்னத்தில் அறைந்துள்ளார். ஹில்லாரி தாக்கியதில் பில் கிளிண்டனுக்கு ரத்தகாயம் எல்லாம் ஏற்பட்டுள்ளது என்றார் ஸ்டோன்.
அடி, உதை
1993ம் ஆண்டு ஹில்லாரி மரணப் படுக்கையில் இருந்த தனது தந்தையை பார்க்க சென்றபோது பில் கிளிண்டன் பாடகி பார்பரா ஸ்ட்ரீசாண்டை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார். இது பற்றி தெரிந்த ஹில்லாரி உடனே கிளம்பி வந்து தனது கணவரை தாக்கியதில் அவருக்கு ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊடக செயலாளர் டீ டீ மேயர்ஸ் தெரிவித்துள்ளார்.
மோனிகா
1999ம் ஆண்டு மோனிகா லிவென்ஸ்கி விவகாரம் வெளியே வந்தபோது ஹில்லாரியும், பில் கிளிண்டன் கத்தி கத்தி சண்டை போட்டதை வெள்ளை மாளிகை ஊழியர்கள் கேட்டுள்ளனர்.
அப்போது ஹில்லாரி பில் கிளிண்டனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அவர் அறைந்த வேகத்தில் அவரின் கைவிரல் பில் கிளிண்டனின் முகத்தில் பதிந்திருக்கிறது.
Share.
Leave A Reply

Exit mobile version