இஸ்ரேல் – பலஸ்தீன பதற்றம் ஏற்படுவதற்கு பெரிதாக உடனடி காரணம் தேட தேவை இருக்காது. போகிறபோக்கில் வெடிக்காத பட்டாசை கொளுத்தி விட் டாலும் அதனையே சாக்காக வைத்து பத்து நாளைக்கு மோதிக்கொள்வார்கள்.

இது இன்றைக்கு முடியப் போவதில்லை என்று வேடிக்கை பார்ப்பவர் நினைக்கும் போதே திடீரென அமைதி திரும்பும். ஒருசில நாட்களில் மீண்டும் பழைய கதைதான்.

இப்போதும் பலஸ்தீனின் மேற்குக் கரை மற்றும் ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலம் பகுதிகளில் பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த குறுக்கே வரும் இஸ்ரேல் படையினருடன் கல்லெறிந்த மோதலில் ஈடுபடுகின்றனர்.

மறுபக்கம் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை ஏதோ கனரக ஆயுதங்களுடன் சண்டைக்கு வரும் எதிரிப் படைபோலவே இஸ்ரேல் இராணுவம் நடத்துகிறது.

கல்லெறிபவர் களை சமாளிக்கத் தெரியாத இந்த இஸ்ரேல் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். அதோடு சேர்த்து கண்ணீர்ப் புகை, ரப்பர் குண்டு தாக்குதல் என்று எக்கச்சக்க வன்முறைகள்.

mother-of-Palestin_3469477bபலஸ்தீன் செம்பிறை சமூகத்தின் கணக்கின்படி கடந்த ஒருவாரத்தில் 1600க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரின் வன்முறையில் காயமடைந்தனர்.

ஒருசில இளைஞர்கள் ஆடு, மாடு கணக்காக சுட்டு கொல்லப் பட்டனர். இது பழகிப் போன் செய்தி என்பதாலோ என்னமோ சர்வதேசம் இஸ்ரேல், பலஸதீன் பதற்றத்தை பெரிதாக கணக்கில் எடுப்பதில்லை. இரண்டு தினங்களுக்கு முன் சம்பிரதாயத்திற்கு அமெரிக்கா ஒரு கவலை அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதனை பார்த்தால் அமெரிக்கா ரெடிமேட்டாக திகதி இடாமல் ஒரு அறிக்கையை எழுதி வைத்திருப்பது போல் தோன்றுகிறது.

இடங்களின் பெயர்களை மாற்றினால் வன்முறை நடக்கும் எந்த சம்பவத்திற்கு அறிவுரை கூற அந்த அறிக்கை பொருத்தமாக இருக்கும். பலஸ்தீன் பிரச்சினையை இந்த இலட்சணத்தில்தான் உலகம் பார்க்கிறது. உருப்படியாக தீர்வு சொல்ல எந்த கொம்பனும் இல்லை.

இஸ்ரேலில் ஒருசில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யூதர்களின் விடுமுறையை ஒட்டியே தற்போதைய பதற்றம் ஆரம்பமானது.

அதற்காக முழுமுதல் காரணமாக அந்த விடுமுறை மீது குற்றம் சாட்ட முடியாது. இஸ்ரேல் செய்யும் ஒடுக்குமுறைகளுக்கு பலஸ்தீனர்கள் ஓய்வு எடுக்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டிய சூழல் அங்கு நிலவுகிறது.

எவ்வாறோ குறித்த யூதர்களின் சுக்கொட் விடுமுறையில் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்கு யூதர்களின் வருகை அதிகரிப்பது வழமையானது. எனவே அந்த வளாகத்தில் பலஸ்தீனர்களை கட்டுப்படுத்த பிரச் சினை பற்றி எரிந் தது.

ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், தனிப் பட்ட பலஸ்தீன இளைஞர்களில் இஸ்ரேலி யர் மீதான தாக்குதல், இஸ்ரேல் படையினர் கோழைத்தனமாக பலஸ்தீனர்கள் மீதான கொலைகள் அதற்கு சொல்லும் மழுப்ப லான காரணங்கள் என்ற எத்தனையோ காரணங்கள் இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே உதவுகிறது.

போகிற போக்கில் இன்னுமொரு இன்திபாதா (intifada) போராட்டம் வெடிக்கும் அபாயம் இருப்பதாக பல தரப்பும் எச்சரிக்கின்றன.

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் டிரக் வண்டி ஒன்று மோதி நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட ஒப்பீட்டளவில் சாதாரண சம்பவம் ஒன்றே 1987ஆம் ஆண்டு முதலாவது இன்திபாழா போராட்டம் நேரம் காலம் பார்க்காமல் ஆரம்பமாக காரணமானது.

கடைசியில் ஆறு ஆண்டுகள் நீடித்த அந்த எழுச்சி போராட்டத்தின் விளைவாகத் தான் ஒஸ்லோ உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டு பலஸ்தீன் நிர்வாக சபை ஒன்றே பிறந்தது.

பின்னர் 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிறந்த இரண்டாவது   இன்திபாதா (intifada) போராட்டத்திற்கு அல் அக்ஸா இன்திபாழா என்று தனிப் பெயரே உண்டு.

இஸ்ரேலின் கொலை இயந்திரம் என்று வர்ணித்தால் எவரும் தப்பென்று சொல்லாத அதன் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்ததை அடுத்தே இந்த எழுச்சி போராட்டம் ஆரம்பமானது.

ஒருநாள் இரண்டு நாள் அல்ல கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நீடித்த இந்த போராட்டத்தின் விளைவாகவே இஸ்ரேல் படை காசாவில் இருந்து முற்றாக வெளியேறியது.

சமகால நிகழ்வுகளை பார்க்கும் போது பலஸ்தீனர்களால் தொடர்ந்தும் பொறுத்திருக்க முடியாத சூழல் நீடிக்கிறது.

கடந்த மாதம் இடம்பெற்ற உலகத் தலைவர்கள் ஒப்புக்கு கூடிக் கலையும் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உரையாற்றியபோது, இஸ்ரேலுடனான உடன்படிக்கைகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். ஒஸ்லோ உடன்படிக் கையையே அவர் சொல்லாமல் சொன்னார்.

ஒஸ்லோ உடன்படிக்கையால் பவஸ்தீனத்திற்கு தீர்வு கிடைத்ததாக பீத்திக்கொண்ட போதும் உண்மையில் அது ஒரு பூச்சாண்டி வேலை என்று தெரிந்து கொள்ள அப்பாசுக்கும் அதிகாரத்தில் இருக்கும் பலஸதீன நிர்வாகத்திற்கும் இரண்டு தசாப்தங்கள் தேவைப்பட்டி ருப்பதுதான் பெரிய கதை.

இந்த ஒஸ்லோ உடன்படிக்கை, அதனால் உருவான பலஸ்தீன அதிகார சபை எல்லாம் இருக்கத்தக்கவே இஸ்ரேல் பலஸ்தீனத்தில் நினைத்ததை எல்லாம் செய்கிறது.

கிழக்கு ஜெரூசலம், மேற்குக் கரை என்று நினைத்த இடத்தில் யூதக் குடியேற்றங்களை உருவாக்கி நாளுக்கு நாள் பலஸ்தீனர்களை சிறுபான்மையாக்கி வருகிறது.

பலஸ்தீனர்களுக்கு எதிராக நாளுக்கு நாள் நடக்கும் ஒடுக்கு முறைகள் ஒன்று இரண்டு அல்ல. கடந்த மாதம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்டத்தில் கல்லெறிந்தால் கூட நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க அனுமதி அளிக்கப் பட்டது.

2005ஆம் ஆண்டு காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியபோதும் அங்கு இருக்கும் மக்களை அது சுதந்திரமாக இருக்க விடவில்லை.

நிலம், நீர், ஆகாயம் என்று எல்லா பக்கங்களும் முடக்கி அந்த பகுதியையே ஒரு திறந்த சிறைச்சாலையாக மாற்றியது. அது மட்டுமல்லாமல் தும்மினால் கூட வானத்தால் வந்து இரண்டு குண்டுகளை போட்டுவிட்டு போகிறது.

இந்த ஒடுக்குமுறை சூழலில் அதற்கு எதிராக போராடுவதை தவறு என்று சொல்ல யாராலும் முடியாது. பலஸ்தீன மக்கள் தொகையும் சராசரியை விடவும் அதிக இளைஞர்களை கொண்ட சமூகம்.

அதாவது மேற்குக் கரை மற்றும் காசாவில் வாழும் 4.5 மில்லியன் பலஸ்தீனர்களில் 70 வீதமானவர்கள் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். எனவே பலஸ்தீன சமூகம் ஒரு பிரச்சினையை பார்க்கும் கோணம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

அண்மைக்காலத்தில் போராட்டக் குழுக்களை விடவும் தனிப்பட்டவர்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது.

அதாவது சாதாரண கத்தி, வாகனம் போன்ற அன்றாடம் கைக்கு கிடைக்கு பொருட்களையும் ஆயுதமாக்கிக் கொண்டு இஸ்ரேல் படையினர் மற்றும் பிரஜைகளை தாக்க முன்வரும் பலஸ்தீனர்களின் எண்ணிக்கை அதிகிரித்திருக்கிறது.

இப்படி கடந்த ஒருசில வாரங்களில் 19 மற்றும் 20 வயதுகள் கொண்ட பலஸ்தீன இளைஞர், யுவதிகள் இஸ்ரேலியர் மீது கத்திக் குத்து தாக்குதல்கள் நடத்த முயன்ற சம்பவங்கள் ஏராளம்.

இவ்வாறான சம்பவங்களின் போது இஸ்ரேல் படையினர் அதனை கையாளும் விதம் அதிக வன்முறை கொண்டதாக இருக்கிறது.

கையில் பேனாவுடன் வரும் பலஸ்தீன இளைஞர்களையும் இஸ்ரேல் படை சுட்டு கொன்று விட்டு கத்திக் குத்து தாக்குதல் நடத்த வந்ததாக சமாளித்து விடுகிறது.

கடந்த மாதம் இஸ்ரேலிய சோதனைச் சாவடியில் 19 வயது பலஸ்தீன பெண் ஒருவர் கத்திக் குத்து குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அது பற்றிய வீடியோ ஆதாரத்தில் அந்த இளம் பெண்ணிடம் எந்த ஆயுதமும் இருக்கவில்லை. ஆனால் அந்த பெண்ணுக்கு எதிராக இரண்டு இஸ்ரேல் படையினர் கொழுத்த துப்பாக்கி நீட்டிக் கொண்டிருந்தது மாத்திரமே நன்றாக தெரிந்தது. இந்த சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்தவோ, விசாரணைக்கு அழைப்பு விடுக்கவோ எந்த வித்துவ பெருமக்களும் இல்லை.

ஒட்டுமொத்தத்தில் பலஸ்தீனர்கள் இன்று முகம்கொடுக்கும் பிரச்சினைக்கு யாரிடமும் தீர்வில்லை என்ற நிலையில் மூன்றாவது முறையாகவும் ஒரு இன்திபாதா போராட்டத்தையாவது செய்து பார்ப்போம் என்று பலஸ்தீனர்கள் முன்வந்தால் அதில் தவறேதுமில்லை.

Israel army …hhhhhhhhha

Share.
Leave A Reply

Exit mobile version