தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனக் கூறப்படும் ஒருவரை நாடுகடத்துமாறு கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

மாணிக்கவாசகம் சுரேஸ் என்பவரையே இவ்வாறு நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கனேடிய குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் சுரேஸை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அந்நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் சுரேஸை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுரேஸ் மேன்முறையீடுகளை செய்து நாடு கடத்தப்படுவதனை தவிர்த்து வந்தார் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுரேஸ் உலகத் தமிழர் அமைப்பின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு வந்தார், என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version