மரணித்துக் கொண்டிருக்கும் பலஸ்தீனர் ஒருவரின் முகத்தின் மீது இஸ் ரேலிய பொலிஸார் ஒருவர் பன்றி இறைச்சியை திணிக்கும் வீடியோ ஒன்று சமூகதளங்களில் அதிகம் பேரின் அவதானத்தை பெற்றுள்ளது.
ஹெப்ரூன் நகருக்கு அருகில் இருக்கும் கிர்யாத் அர்பா குடியேற்ற பகுதி யில் இஸ்ரேல் பொலிஸ் அதிகாரி மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்த முயன்ற குற்றச்சாட்டிலேயே அந்த பலஸ்தீனர் சுடப்பட்டுள்ளார்.
யூடியுபில் பதிவேற்றப்பட்டிருக்கும் சில வினாடிகள் கொண்ட இந்த வீடி யோவில், இருப்பது பன்றி இறைச்சி என்பது உறுதிசெய்யப்படவில்லை.
முஸ்லிம்கள் மற்றும் யூதர்களுக்கு தடுக்கப்பட்ட பன்றி இறைச்சியை இவ் வாறு போடுவது, மரணிக்கும் ஒருவருக்கு செய்யும் மோசமான அவமானம் என்று கருதப்படுகிறது. அந்த பலஸ்தீனர் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்.