ஹர்தா, மத்திய் பிரதேசம்: மனைவியுடன் அந்தரங்க கோலத்தில் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து கோபமடைந்த கணவர், அந்த நபரின் அணுறுப்பை சரமாரியாக அறுத்து எறிந்தார். இதில் அந்த நபர் உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பஸ்பானி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கல் (45). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் பதிராம்.
சம்பவத்தன்று தனது வீட்டுக்கு வந்த மங்கல், அங்கு பதிராம், தனது மனைவியுடன் அந்தரங்க கோலத்தில் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார்.
கோபமடைந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பதிராமைத் தாக்கினார். பின்னர் அவரது ஆணுறுப்பை கரகரவென அறுத்து எறிந்தார்.
இதில் துடிதுடித்துத பதிராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பதிராமைக் கொன்று விட்டு வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார் மங்கல். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
குடித்து விட்டு மணமேடைக்கு வந்த மாப்பிள்ளை… நீ வேணாம் போ என்று நிராகரித்த மணமகள்
உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடைபெற இருந்த திருமணத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடந்து வந்தது. அப்போது, மேடை ஏறி வந்த மணமகள், நன்கு மதுபோதையில் மணமகன் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின், திருமணத்தன்றே குடித்து விட்டு அமர்ந்திருக்கும் மாப்பிள்ளைக்கு மனைவியாக தனக்கு விருப்பமில்லை என்று கூறி, மாலையைக் கழற்றி வைத்து விட்டார்.
இதனால் நடக்க இருந்த திருமணம் நின்று போனது. இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், மணமகள் மீது போலீசில் புகார் அளிக்கச் சென்றனர். பின்னர் போலீசாரின் அறிவுரையால் அவர்கள் புகார் எதுவும் தரவில்லை.