நெதர்லாந் திலுள்ள உயிரியல் ஆசிரியை ஒருவர், உடலின் உள்ளு றுப்புகள் குறித்து தனது மாணவர் களுக்கு விளக்கு வதற்காக தனது ஆடையில் உள்ளுறுப் புகளின் படங்களை வரைந்து பாடம் நடத்தியுள்ளார்.

நெதர்லாந்தின் க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் பாடசாலையைச் சேர்ந்த டெபி ஹீர்கென்ஸ் எனும் ஆசிரியையே இவ்வாறு விநோதமான முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.

இவர்  7 வருடங்களாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

 12675_teacher

ஒரு நாள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மனித உடற்பாகங்கள் சம்பந்தப் பட்ட பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் இவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது.

தான் வசிக்கும் பிரதே சத்தில், உடற்தசைகளைப் போன்று வரையப்பட்ட லெகிங்ஸ்களுடன் பெண்கள் நடந்து  செல்வதை அவதானித்துள்­ளார்.

அதேபோன்று உடலின் உள் அங்கங்களையும் மேலாடையில் வரைந்துகொண்டு அந்த ஆடையுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தால் அவர்களும் சுலபமாக புரிந்துகொள்வார்கள் என டெபி எண்ணியுள்­ளார்.

 

இதற்காக தலைமை ஆசிரியையிடம் அனுமதி கோரிய போது, தலைமை யாசிரியையும் இத்திட்ட த்துக்கு அனுமதித்துள்­ளார்.

அதைய டுத்து அண்மை யில் ஒரு நாள் மாணவர்க ளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், திடீரென மேசை மேல் ஏறிநின்று கொண்டு தனது மேலாடையை களைந்துள்­ளார்.

அந்த ஆடைக்குள், எலும்புக்கூடு மற்றும் உடல் உறுப்புகள் சார்ந்த பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ள ஆடைகளை டெபி அணிந்தி ருந்ததை பார்த்து மாணவர்கள் ஆச்சரியத்தில் கவனித்தனராம்.

ஆசிரியையின் இந்த வித்தியாசமான முயற்சியை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதை வைத்து அந்த ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அந்த ஆசிரியரின் முயற்சியை அந்த பள்ளி நிர்வாகம் பாராட்டியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version