நியூயார்க்: நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் எடுத்துள்ள புகைப்படம் ஒன்றில் செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்ட புத்தர் சிலை போன்ற அமைப்பு தென்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளியில் உள்ள மற்ற கோள்கள் மற்றும் பால்வெளி குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதிலும் குறிப்பாக செவ்வாயில் மனிதர்களைக் குடியேற்றுவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை ஆராய அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன.

16-1444995021-nasa-rover-clicks-stunning-selfie-on-mars-600

கியூரியாசிட்டி…
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை இறக்கியுள்ளது. இந்த விண்கலமானது அங்கிருந்தபடி புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

செவ்வாயில் தண்ணீர்…

சமீபத்தில் தான் செவ்வாய்கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதி செய்தது. அதன் மூலம் அங்கு மனிதர்கள் வாழ்வது சாத்தியமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வித்தியாசமான உருவங்கள்…
இதற்கிடையே கியூரியாசிட்டி எடுத்து அனுப்பும் புகைப்படங்களை நாசா இணையத்தில் வெளியிட்டு வருகிறது. அந்தப் புகைப்படங்களை ஆய்வு செய்யும் யுஎப்ஓ அமைப்புகள், அதில் நண்டு, மனிதர்கள், பிரமிடு என பல்வேறு உருவங்கள் தென்படுவதாக அவ்வப்போது செய்தி வெளியிடுவதுண்டு.

புத்தர் சிலை...

அந்த வகையில் சமீபத்தில் நாசா வெளியிட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தில் பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்று இருப்பதாக வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது.

உண்மையை மறைக்கும் நாசா…

இதன் மூலம் ‘அறிவார்ந்த வாழ்க்கை முறை அங்கு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், அதனை நாசா நம்மிடமிருந்து மறைக்கப் பார்க்கிறது எனவும் இந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

பாறைகளால் ஆன உருவம்…

புத்தர் சிலை என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ள புகைப்படத்தில் பாறைகளால் ஆன உருவம் போல் தோற்றமளிக்கிறது. அதில், ஒரு தலை, மார்பகங்கள், பருமனான வயிறு, தோள்பட்டை போன்றவை காட்சியளிக்கின்றன. அந்த உருவத்தின் தலையானது வலது பக்கம் திரும்பி உள்ளது போல் இருக்கிறது.

வைரல்…

இந்தப் புகைப்படமானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், வழக்கம் போல இது நம் பார்வையின் கணிப்பாகக் கூட இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

The APPEARANCE of a human head is similar to President obama and the Buddha statue on Mars

Share.
Leave A Reply

Exit mobile version