தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பாலித்தீன் பையில் அடைத்து வீசப்பட்ட குழந்தை!
மணிலா: பிலிப்பைன்ஸில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பிறந்த சிசு ஒன்று உயிருடன் பையில் அடைத்து வீசப்பட்டது. அந்தக் குழந்தை தற்போது உயிருடன் மீட்கப்பட்டது.
நம்ம ஊரில்தான் பிறந்த சிசுக்களை சாக்கடையில் வீசுவதும், குப்பைத் தொட்டியில் போடுவதும் சகஜம் என்றால் வெளிநாடுகளிலும் கூட இதுபோல நடப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
பிலிப்பைன்ஸில், ஒரு பிறந்த குழந்தையை பெரிய கருப்புப் பாலீத்தீன் பையில் போட்டு அதை குப்பைத் தொட்டியில் வீசி விட்டனர். சாலையோரமாக சென்றவர்கள் அந்தப் பையிலிருந்து குழந்தையின் அழுகுரல் வருவதைக் கேட்டு திறந்து பார்த்தபோது தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் குழந்தை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் அக்குழந்தையின் கைகளில் கிளவுஸ் மாட்டி அதைப் பாதுகாக்க முயல்கிறார். ஒருவர் தரைவிரிப்பை விரித்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்.