பெங்­க­ளூரு: ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்­ப­டத்தைப் போல தாலி கட்­டிய மனை­வியை அவ­ரது காத­ல­னுடன் சேர்த்து வைக்க சென்னை பொறி­யி­யலாளர் விவா­க­ரத்து கோரி நீதி­மன்­றத்தை நாடி உள்ளார்.

கர்­நா­டக மாநிலம் கொப்பல் மாவட்­டத்தைச் சேர்ந்­தவர் சுதா (20 வயது – பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). அதே பகுதியைச் சேர்ந்­தவர் ராகவன் (23 வயது – பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது).

இரு­வரும் பாட­சா­லையில் படிக்கும் காலத்திலிருந்து காதலித்­துள்­ளனர். ராகவன் வேறு சாதியைச் சேர்ந்­தவர் என்­பதால், சுதாவின் காத­லுக்கு அவ­ரு­டைய வீட்டில் எதிர்ப்பு ஏற்­பட்டு இருக்­கி­றது.

உடனே சுதாவின் படிப்­பையும் பாதியில் நிறுத்தி இருக்­கி­றார்கள் அவ­ரது பெற்றோர்.

ஆனாலும் இந்த காதல் ஜோடி கைபேசியில் பேசி தங்­க­ளது காதலை வளர்த்து வந்­தி­ருக்­கின்­றனர். அதையும் அறிந்த சுதாவின் பெற்றோர், அவ­ருக்கு உடனே திரு­மணம் செய்து வைக்க முடிவு செய்­தனர்.

அதன்­படி சுதாவை அவ­ரு­டைய உற­வி­ன­ரான சென்­னையில் பொறி­யியலாள­ராக வேலை பார்த்து வரு­ப­வ­ருக்கு கடந்த ஜூன் 11 ஆம் திகதி கட்­டாயத் திரு­மணம் செய்து வைத்­தி­ருக்­கின்­றனர்.

இதன்போது கண­வ­ரிடம் தனது காதல் கதையை சுதா கண்ணீர் மல்க கூறி இருக்­கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவ­ரு­டைய கணவர், தனது மனதை தேற்­றிக்­கொண்டு, உன் காத­ல­னுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று சுதா­விடம் உறுதி கூறி இருக்­கிறார்.

இதை­ய­டுத்து சுதாவின் காதலன் மற்றும் அவ­ரு­டைய பெற்­றோரைச் சந்­தித்த அந்தப் பொறி­யி­யலாளர், நடந்த சம்­ப­வங்­களை விளக்கி கூறி, சுதா­வுக்கும் ராக­வ­னுக்கும் திரு­மணம் செய்து வைக்க சம்­மதம் பெற்­றி­ருக்­கிறார்.

அதன் பின்னர், இது­பற்றி தனது பெற்றோர் மற்றும் சுதாவின் பெற்­றோ­ரிடம் கூறி இருக்­கிறார்.

ஆனால் அவர்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­துடன்,அவர்­க­ளுக்கு சென்­னையில் வாடகை வீடு பார்த்து தங்க வைத்து சமா­தானம் செய்­தி­ருக்­கின்­றனர். இரு­வரும் சக­ஜ­மான தம்­பதி போல நடித்து வந்­துள்­ளனர்.

இந்­நி­லையில், ஆடி மாதம் வந்­ததால் சுதாவை ஆந்­தி­ரா­வுக்கு அழைத்து வந்­தனர் பெற்றோர். அப்­போது சுதா தனது காதலன் ராக­வ­னுடன் பொலிஸ் நிலை­யத்தில் தஞ்சம் அடைந்து நடந்­த­வற்றை கூறி­யுள்ளார்.

சுதா, ராகவன் மற்றும் பொறி­யி­ய­லாளர் ஆகி­யோரின் பெற் ­றோரை அழைத்து பொலிஸார் பேச்­சு­வார்த்தை நடத்தி­யுள்­ளனர். சுதாவை அவரின் காத­ல­னுடன் சேர்த்து வைக்க கணவர் சம்­மதம் தெரி­வித்து இருக்­கிறார்.

அப்­போது, முறைப்­படி சுதாவின் கண­வ­ரிடம் இருந்து விவா­க­ரத்து பெற்று, அதன்பின் சுதாவை அவ­ரது காதலனுடன் சேர்த்து வையுங்கள் என்று பொலிஸார் அறி­வுரை கூறி இருக்­கின்­றனர்.

தற்போது சுதாவும் ராகவனும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர் விவாகரத்து கிடைக்கும் வரை, பெண்கள் நல காப்பகத்தில் சுதாவை தங்கியிருப்பதற்கு பொலி ஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version