பிரித்தானியாவில் இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரித்தானியாவில் லீட்ஸ் நகரில் கடந்த வெள்ளியன்று பெண் ஒருவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக டாக்சி பிடிப்பதற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் பிரிக்கேட் சாலையை அடைந்ததும் திடீரென அந்த பெண்ணை வலுகட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் பாதிப்புக்குள்ளாகிய பெண்ணை தூக்கி செல்லும் காட்சிகள் சாலையில் இருந்த கமெராவில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்வதற்கு முன்பாகவே குற்றவாளி சாலையில் சுற்றித் திரிந்ததாகவும், வேறு ஒரு பெண் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரிடமும் பேச்சு கொடுத்தபடி சென்றதுm அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.
மேலும் தற்போது இது தொடர்பான காட்சிகளை வெளியிட்டு குற்றவாளியை தீவிரமாக தேடிவருகின்றனர்.