தமிழ் அர­சியல் கைதிகள் கடந்த ஆறு தினங்­க­ளாக மேற்­கொண்­டு­வந்த உண்­ணா­வி­ரதம் நேற்றுக் காலை­யுடன் முடி­வுக்கு வந்­த­தது.

அர­சியல் கைதி­களை எதிர்­வரும் ஏழாம் திக­திக்கு முன்னர் விடு­தலை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­வாதம் அளித்­துள்­ள­தாக எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவ­ரு­மான இரா. சம்­பந்தன் நேற்றுக் காலை தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்தே உண்ணாவிரதம் தற்­கா­லி­க­மாக முடி­வுக்கு வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்ப­டு­கி­றது.

எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் நேற்றுக் காலை மெகஸின் சிறைச்­சா­லைக் குச் சென்று உண்ணாவிரதத்தில் ஈடு­பட்­டி­ருந்த தமிழ் அர­சியல் கைதி­களை பார் ­வை­யிட்­ட­துடன் அவர்­க­ளிடம் ஜனா­தி­பதி வழங்­கிய உத்­த­ர­வா­தத்­தையும் தெரி­வித் தார்.

எதிர்க்­கட்சித் தலை­வ­ருடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகியோரும் சென்­றி­ருந்­தனர்.

முன்­ன­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வரன்

பொல­ந­று­வை­யி­லி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு கைதிகளின் நிலமை மிகவும் மோச­ம­டைந்­துள்­ள­தா­கவும் அவர்­க­ளுக்கு உயி­ரா­பத்து ஏற்­ப­டாத வகையில் துரித நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்­டுக்­கொண்டார்.

இதற்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, கைதி­களை விடு­தலை செய்­வது தொடர்பில் தாம் துரித நட­வ­டிக்கை எடுப்பதாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

எதிர்­க­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் வட­மா­கா­ண­சபை முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகியோரின் நட­வ­டிக்­கை­யை­ய­டுத்து ஜனா­தி­பதி மேற்­படி உத்­த­ர­வா­தத்தை வழங்­கி­யுள்­ள­துடன் கைதி­களின் உண்­ணா­வி­ர­தமும் தற்­கா­லி­க­மாக முடி­வுக்கு வந்­தது.

எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் மெகசின் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டி­ருந்த அரசியல் கைதி­களை நேற்றுக் காலை சந்­தித்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில்,

சிறைச்­சா­லை­க­ளி­லுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்பில் நேற்று (நேற்று முன்­தினம்) ஜனா­தி­பதி மைத்திரி­பால சிறி­சேன மற்றும் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்­ததை நடத்தினேன்.

அர­சியல் கைதிகள் தாம­த­மில்­லாமல் விடு­தலை செய்­யப்ட வேண்டும். இந்த மாதம் முடி­வ­டை­வ­தற்குள் அவர்களை விடு­விப்­ப­தற்­கான நடை­மு­றைகள் ஆரம்­பிக்­கப்­ட­வேண்டும். அடுத்த மாதம் ஏழாம் திக­திக்கு முன்னர் அந்தக் கருமம் நிறை­வ­டைய வேண்டும் என்­கின்ற கோரிக்­கை­யினை ஜனா­தி­ப­தி­யிடம் முன்வைத்தேன்.

ஜனா­தி­பதி எவ்­வித தயக்­க­மு­மின்றி எமது கோரிக்­கை­யினை நிறை­வேற்­று­வ­தாக வாக்­க­ளித்தார். அத்­துடன் குறித்த விட­யத்தை தான் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியைப் பொறுத்த­வ­ரையில் கைதிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கிறார்.

இது தொடர்­பான கட்­ட­ளை­யொன்றை தான் நீதி­ய­மைச்­ச­ருக்கு அனுப்­பி­வைப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி கூறினார்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான பேச்­சு­வார்த்­தையின் பின்னர் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போது,  ஜனா­தி­பதி தன்­னுடன் பேசி அவ்­வி­த­மான உத்­த­ரவைப் பிறப்­பித்­தி­ருப்­ப­தா­கவும் அதன்­படி நடவ­டிக்கை எடுப்­ப­தா­கவும் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தெரி­வித்தார்.

எனவே, அர­சியல் கைதி­களின் விடு­தலை இம்­மாதம் முடி­வ­டை­வ­தற்கு முன்னர் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். அடுத்த மாதம் ஏழாம் திக­திக்கு முன்னர் கைதி­களின் விடு­தலை முடி­வ­டைய வேண்டும்.

எனினும் இதில் ஒரு விதி­வி­லக்கும் உள்­ளது. அதா­வது பாரா­தூ­ர­மான வழக்­கு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களின் விடயம் இரண்டாம் கட்­ட­மாகக் கரு­தப்­படும்.

அவ்­வா­றான பாரா­தூ­ர­மான வழக்­கு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் சுமார் 30 பேர் வரையில் இருக்­கலாம். எனவே அவர்கள் தவிர்ந்த ஏனைய அர­சியல் கைதிகள் எதிர்­வரும் ஏழாம் திக­திக்கு முன்னர் விடு­விக்­கப்­ப­டுவர்.

ஆகவே, குறித்த விட­யத்தை சிறைக் கைதி­க­ளுக்கு எடுத்­துக்­கூற வேண்­டிய கடப்­பாடு எமக்­கி­ருந்­தது.

ஆனால் இன்று காலை (நேற்று காலை) இங்கு வந்து இந்தச் சிறை­யி­லுள்ள நூற்­றுக்கும் அதி­க­மான கைதி­களைச் சந்தித்து நிலை­மை­யினை விளக்­கினோம்.

அப்­போது, ஜனா­தி­பதி வழங்­கி­யி­ருக்கும் வாக்­கு­று­தியை ஏற்று அதனை நிறை­வேற்­று­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்கும் வகையில் தமது உண்­ணா­வி­ர­தத்தை இடை­நி­றுத்தம் செய்­வ­தற்கு கைதிகள் இணங்­கினர்.

எனினும் இந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­டா­ம­லி­ருந்தால் அடுத்த மாதம் ஏழாம் திக­திக்குப் பின்னர் மீண்டும் உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பிப்­ப­தா­கவும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.

அர­சாங்கம் நிச்­ச­ய­மாக தனது வாக்­கு­று­தியை நிறை­வேற்றும். அதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை. ஜனாதிபதியைப் பொறுத்­த­வ­ரையில் கைதிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கிறார். அவர்­மீது நாம் நம்­பிக்கை வைத்­துள்ளோம்.

எனினும், அர­சாங்கம் வழங்­கி­யி­ருக்கும் குறித்த வாக்­கு­று­தியை நிறை­வேற்றத் தவறும் பட்­சத்தில் அடுத்த மாதம் ஏழாம் திக­திக்­குப்­பின்னர் கைதிகள் தொடங்­க­வுள்ள உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் தமிழ் தேசியக் கூட்ட­மைப்பும் இணைந்து செயற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

C.V.Vigneswaranஇது­தொ­டர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன்  தெரி­விக்­கையில் , உண்­ணா­வி­ரதம் இருந்து வரும் கைதி­களில் 32 பேர் வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­பது குறித்தும் அவர்­களின் நிலைமை மிகவும் மோச­ம­டைந்­துள்­ளமை தொடர்­பிலும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு வந்தேன்.

இந்­நி­லையில் எவரும் மர­ணிக்க நேர்ந்தால் அது மிகுந்த நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் எனவும் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்துக் கூறினேன்.

இதற்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி இது, தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுத்துள்ளதாகவும் நீதியமைச்சரிடம் பேசியுள்ளதாகவும் கூறினார்.

மேலும் தமிழ் அரசியல் கைதிகள் தங்களிடமிருந்தே உத்தரவாதத்தை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் உங்கள் வார்த்தையிலேயே நம்பிக்கை கொண்டுள்ளனர்.

எனவே அதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, தான் இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அத்துடன் ஏலவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிகள் தொடர்து புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவது தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version