கொழும்பு: இலங்கை யுத்தத்தின் போது ஊடகங்கள் காட்டியது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அல்ல; அவர் உயிருடன் இருக்கலாம் என்று ‘ரா’ முன்னாள் அதிகாரியும் கடற்படை அதிகாரியுமான கார்கில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு கார்கில் சுப்ரமணியம் அளித்த பேட்டி என இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

– இலங்கை அரசு காட்டியது பிரபாகரன் உடல் அல்ல. அது அவருடைய உடல்தான் எனில் முறையாக இறப்பு சான்றிதழ், மரபணு பரிசோதனை சான்றிதழ் வழங்காதது ஏன்?
– இலங்கையில் மரபணு சோதனை நடத்துவதற்காக பரிசோதனை வசதியே கிடையாது.
– இந்தியாவிடம் பிரபாகரன் மரணம் தொடர்பாக இலங்கை அளித்தது ஒரு “அறிக்கை” மட்டுமே…மரண சான்றிதழ் அல்ல.
– ஊடகங்களில் காட்டப்பட்ட உடலில் இருந்து மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்ட போதும் அதை இந்தியாவிடம் இலங்கை கொடுக்கவில்லை.
– இந்த மரபணு மாதிரி பற்றிய முடிவுகளை இலங்கை ஏன் வெளியிடவில்லை? – அப்படியானால் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறாரா?
– இறுதி யுத்தத்தின் சில நாட்களுக்கு முன்னரே பிரபாகரனின் மனைவி, மகள் இலங்கை ராணுவத்தால் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
– ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுமாறு பிரபாகரனை இந்தியா கேட்டது.
– ஆயுதங்களை ஒப்படைக்காமல் போரிடுங்கள் என வைகோ, நெடுமாறன் ஆகியோர் கூறினர். இதனை பிரபாகரன் கேட்டதால் தோல்வி அடைந்தார்.
– ராஜபக்சேவின் தோல்விக்கு ‘ரா’வின் பங்களிப்பு இருக்கலாம். இவ்வாறு அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

l

Share.
Leave A Reply

Exit mobile version