கடத்தல் மற்றும் காணாமற்போதல் தொடர்பாக விசாரணை நடத்திய மக்ஸ வெல் பரணகம ஆணைக்குழு என அறியப்படும் விசாரணை ஆணைக்குழுவின், விசாரணை அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டபோது, போரின் இறுதிக்கட்டமான இறுதி 12 மணித்தியாலங்களில் பெரும்பான்மையான தமிழ் பொதுமக்களை எல்.ரீ.ரீ.ஈதான் கொன்றுள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை மற்றும் உடலகம ஆணைக்குழு அறிக்கை ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு வெளியான அறிக்கையுடன் சேர்த்து பாராளுமன்றில் சமர்ப்பித்தார்.
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவித்திருப்பது, ” எல்.ரீ.ரீ.ஈ பற்றிய அதன் கண்டுபிடிப்புகளிலிருந்து ஆணைக்குழு நன்கு அறியும் உண்மை ஒவ்வொரு பிரதான தொண்டு நிறுவனங்களும் மற்றும் அநேக சர்வதேச அமைப்புகளும் எல்.ரீ.ரீ.ஈ யின் நடத்தைகள் மற்றும் குறிப்பாக, இறுதிக்கட்ட போரின்போது சிறுவர்களை சிறுவர் போராளிகளாக கட்டாய ஆட்சேர்ப்பு செய்வது உட்பட தமிழ் பொதுமக்களை அது உபசரித்த விதத்துக்கும் ஒட்டுண்ணித்தனமான சார்பு அங்கீகாரத்தை வழங்கியிருந்தன.
யாழப்பாணத்தை தளமாக கொண்ட மதிப்பு மிக்க ஒரு தொண்டு நிறுவனத்தின் கணிப்பீட்டின்படி, இறுதி 12 மணித்தியால மோதலின்போது பெரும்பான்மையான தமிழ் பொதுமக்களின் மரணம் எல்.ரீ.ரீ.ஈ யினாலேயே மேற்கொள்ளப் பட்டது” என்று.
“பொதுமக்கள் இராணுவத்தால் ஒன்றில் நேரடியாக இலக்கு வைக்கப் பட்டதையோ அல்லது பாரபட்சமாக ஸ்ரீலங்கா இராணுவத்தால் இன அழிப்பு திட்டத்துடன் இலக்கு வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுவதை” அந்த அறிக்கை நிராகரிக்கிறது.
“ஆணைக்குழு கண்டுபிடித்திருப்பது தருஸ்மன் அறிக்கை அதேபோல ஏனைய அறிக்கைகளும், சர்வதேச குற்றங்களுக்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தை விசாரணை நடத்தவேண்டும் என்கிற கடமையை கருத்தில் கொண்டு குறிப்பாக குறுகிய மற்றும் கட்டுப்பாடான கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன”
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது,” பிரதானமாக இறுதிக்கட்ட ஆயுத மோதலின்பொழுது பொதுமக்களின் இழப்புக்கு பிரதானமாக எல்.ரீ.ரீ.ஈயே பொறுப்பாக இருந்திருக்கிறது, ஏனெனில் 300,000 முதல் 330,000 வரையான பொதுமக்களை அது பணயக் கைதிகளாக வைத்திருந்தது உட்பட, தங்கள் இராணுவ இலக்குக்கு பொருத்தமான வகையில் தமிழ் மக்களை கொலை செய்யும் மூலோபாயத்தை நடைமுறைப் படுத்தத் தக்க விதத்தில் பொதுமக்களை ஒரு மனித கவசமாக பயன்படுத்தும் உத்தியை கையாண்டதால் கணிசமானளவு உயிரிழப்புக்கு அது வழிவகுத்தது,
பணயக் கைதிகளைப் பயன்படுத்தி அகழிகளைத் தோண்டியதனாலும், வலுவூட்டும் கட்டமைப்புகளை மேற்கொண்டதினாலும் அவர்களுக்கு தீங்கு ஏற்படும் வகையில் அவர்களை வெளிப்படுத்தியது, எல்.ரீ.ரீ.ஈ தலைமையை அதிகாரத்தில் வைத்திருப்பதற்காக எண்ணற்ற பணயக் கைதிளான பொதுமக்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது,
பணயக் கைதிகளை ஆயுதம் ஏந்த வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி போரின் முன்னரங்க நிலைகளுக்குத் தள்ளியது பெருமளவு மரணத்தை ஏற்படுத்த வழி செய்தது,பெருமளவிலான சிறுவர்களை போரின் முன்னணி நிலைக்கு வற்புறுத்தி கொண்டுவந்து நிறுத்தியது, அவர்களது திறமையான கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை வேண்டுமென்றே தடுத்தது,
போர் நடைபெறும் பகுதிகளை விட்டு தூரச் செல்லாமல் பொதுமக்களை தடுத்தது மற்றும் தாங்கள் சிறைப்பிடிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தப்பியோட முயன்ற பணயக் கைதிகளை கொலை செய்தது, பணயக் கைதிகளான பொதுமக்கள் மீது குண்டுமாரி பொழிந்தது ஏனென்றால் அந்த மரணங்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டது என்று கூறி சர்வதேச மனிதாபிமான தலையீட்டை எழுச்சி பெறவைக்கும் நோக்கம் கொண்ட ஊடக பரப்புரைகளுக்காகவும் எல்.ரீ.ரீ.ஈ இதனை மேற்கொண்டிருக்கலாம்,
தங்களுடைய கனரக ஆயுதங்களை பொதுமக்கள் மத்தியில் வைத்ததினால் பொதுமக்கள் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாமற் செய்தது, தற்கொலை குண்டுதாரிகளைப் பயன்படுத்தி பொதுமக்களைக் கொன்றது, கண்ணி வெடிகள் மற்றும் இதர வெடிபொருள் உபகரணங்களை வைத்ததின் விளைவாக பொதுமக்களுக்கு மரணம் ஏற்படுத்தியது.
எல்.ரீ.ரீ.ஈ யின் பிடியில் இருந்து தப்பியோடும் முயற்சியில் பொதுமக்கள் நீரில் மூழ்கி மரணமடைந்ததுக்கு காரணமாகவிருந்தது.
மற்றும் கணிசமானளவு எண்ணிக்கையிலான அதன் அங்கத்தவர்களை சிவில் உடையில் போரிடும் நடவடிக்கையை பின்பற்றியது, இது போராளிக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை மழுங்கடித்தது காரணமாக தவிர்க்க முடியாதபடி பொதுமக்கள் மரணமடையும் நிலை உருவானது.”
ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஷெல் வீச்சு சந்தேகமின்றி கணிசமானளவு எண்ணிக்கையிலான பொதுமக்களின் மரணத்துக்கு காரணமாக இருந்தது என்பதை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.”
ஆனால் ஆணைக்குழு வலியுறுத்துவது, ஏப்ரல் 12ல் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு யுத்த நிறுத்தத்துக்கு அனுமதித்தபோதும் கூட, எல்.ரீ.ரீ.ஈ பொதுமக்களை தங்கள் கட்டுப்பாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க மறுத்தது, அவர்களை ஒரு கவசமாகப் பயன்படுத்துவது மற்றும் ஆட்சேர்ப்புக்கு தேவையான ஆட்களை பெறலாம் என்கிற இரண்டு காரணங்களுக்காக என்பதால், இது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையாகி விட்டது.
அதனால் அத்தகைய ஈவு இரக்கமற்ற முறையில் பொதுமக்கள் சுரண்டப்படுவதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு வசதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், எந்த அரசாங்கமும் சிறுவர்களை முன்னரங்க நிலைகளில் கட்டாயமாக நிறுத்துவதை அனுமதிக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது.,
தருஸ்மன் அறிக்கையின் கண்டுபிடிப்பாக கூறப்பட்டிருக்கும் “நம்பிக்கைக்குரிய தரப்பினர் 40,000 வரையிலான பொதுமக்களின் மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கணிப்பிட்டிருப்பதை” ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
காணாமற்போனவர்களின் விடயம் மற்றும் அந்த நோக்கத்துக்கான பல்வேறு மட்டங்களிலான பொறிமுறையை நிறுவு வேண்டியதன் அவசியம் பற்றி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
“வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு தீர்வுகள் தேவைப்படும், மற்றும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருத்தமான எந்த அணுகுமுறையும் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
ஒருங்கிணைப்பு பொறிமுறை மற்றும் தேசிய பொறிமுறை என்பன எப்போதும் கவலைக்குள்ளாகியுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் தங்கள் பணி தொடர்பாக ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், அதன் வரம்புகள், வெற்றிக்கான வாய்ப்புகள் மற்றும் காணாமற்போன நபர் உயிரோடிருப்பதை கண்டு பிடிப்பதற்கான நிகழ்தகவுகள் அல்லது பிணத்தை தோண்டியெடுத்தல் அல்லது தடயவியல் ஆயுவு மூலம் கண்டறிதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு கூடுதலாக தேவையான உதவிகளை அவர்கள் எப்படி பெறமுடியும் எனக் குடும்பங்களிடம் அறிவிக்க வேண்டும் மற்றும் இழப்பீடு வழங்குவதுடன் மற்றும் அவர்களின் பிரியப்பட்டவர்கள் காணாமற்போனதற்கு பொறுப்பாக இருந்தவர்களை தணடிப்பதற்கான சாத்தியங்கள் பற்றியும் தெரிவிக்க வேண்டும்.
“அநேக முறைப்பாடுகளில் தெரிவிக்கப் பட்டிருப்பது அவர்களின் குடும்ப உறப்பினர்கள் கடத்தப்பட்டது அல்லது கட்டாய காணாமற் போக்கடித்தலுக்கு ஆளானது அவர்களது வசிப்பிடத்தில் வைத்துத்தான் என்று, அதேவேளை சிலர் சொல்லியிருப்பது அவர்களது அங்கத்தவர்கள் கடத்தப்பட்டது அவர்களின் வீடுகள் அல்லாத வேறு இடங்களில் என்றும், அந்த தகவல் அந்த அங்கத்தவரின் குடும்பத்தினருக்கு மூன்றாவது தரப்பினரால் தெரியப்படுத்தப் பட்டது என்றும்”.
எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகள் தொடர்பாக சிறைச்சாலைகளில் உள்ளவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
“காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும், அப்படி வழங்குவதினால் அவர்கள் சுயமாக தங்கள் வாழ்வாதாரங்களை நிலைநிறுத்தும் வரையான ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு தொடர்ச்சியாக தங்கள் வாழ்வாதாரங்களை தாங்கிக் கொள்ள வேண்டிய உதவிகளை வழங்குதல் வேண்டும். யுத்தம் காரணமாக காணாமற் போனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து துயரமான நிலையில் மூழ்கியுள்ளதை இந்த ஆணைக்குழு அவதானித்துள்ளது”
ஆணைக்குழு மேலும் பரிந்துரைத்திருப்பது ஆலோசனை வழங்கும் நடவடிக்கை மற்றும் சமூக உளவியல் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கு. கடத்தல் மற்றும் காணாமற்போக்கடித்தல் பற்றி விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு, வடக்கு மற்றும் கிழக்கில் 12 பொது அமர்வுகளை நடத்தியது. ஒவ்வொரு பொது அமர்வும் நான்கு நாட்கள் வரையான காலம்வரை நீண்டிருந்தது.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேட்ட நீதிபதி மக்ஸ்வெல் பரணகமவும் அங்கத்தவர்களாக சுரஞ்சனா வைத்தியரத்ன,மனோ ராமநாதன்,டபிள்யு.ஏ.ரி.ரத்னாயக்கா மற்றும் எச்.சுமணபால ஆகியோர் நியமிக்கப் பட்டிருந்தனர்.
பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது அறிக்கை, ஆகஸ்ட் 1, 2005 முதல் தீவிரமான மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் (உடலகம ஆணைக்குழு) இறுதி வெளிப்பாடு சம்பந்தமானது.
17 உதவிப் பணியாளர்களின் கொலைக்கு மேலதிகமாக ஆகஸ்ட் 2006ல் செஞ்சோலை எனப்படும் நட்டாலம்மோட்டன்குளம் என்னும் இடத்தில் வைத்து 51 பேர் கொல்லப்பட்ட சம்பவம், மூதூரில் வைத்து முஸ்லிம் கிராமவாசிகள் கொல்லப்பட்டது, மூதூரை சேர்ந்த 14 பேரை 2006 ஆகஸ்ட் ஆரம்பத்தில் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றிச்சென்று வெலிக்கந்தையில் வைத்து கொலை செய்தது, 2006 செப்ரெம்பர் 17ல் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரதெல்ல என்னும் இடத்தில் வைத்து 10 முஸ்லிம் கிராமவாசிகள் கொல்லப்பட்டது, திருகோணமலையில் வைத்து ஐந்து தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் தொடர்பாகவும் மற்றொரு அறிக்கையினையும் இந்த ஆணைக்குழு தொகுத்திருந்தது.;
பிரதானமாக இரண்டு வழக்குகள் அக்ஷன் கொன்ட்ரோ பாமைச் சேர்ந்த 17 உதவிப் பணியாளர்களின் கொலைகள் மற்றும் திருகோணமலையில் வைத்து ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டதும் சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்கள் உட்பட பல கட்சியினரதும் கவனத்தை பெரிதும் ஈர்த்திருந்தன. இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையுமே ஆணைக்குழுவின் பெரும்பகுதி நேரத்தை எடுத்திருந்தன”
இந்த ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் என்.கே. உடலகமவும் இதன் அங்கத்தவர்களாக உபவன்ச யாப்பா, தேவநேசன் நேசையா, கே.சி.லோகேஸ்வரன், மனோரி முத்தெட்டுவேகம, ஜெசீமா இஸ்மாயில் எஸ்.எஸ். விஜேரட்ன, ஜாவிட் யூசுப், டக்ளஸ் பிரேரட்ன, எம்.பைசல் ரசீம் மற்றும் டென்சில் ஜே. குணரட்ன ஆகியோர் நியமிக்கப் பட்டிருந்தனர்.