கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படவுள்ள ஜஸ்டின் டிரிடியு ரயில் நிலையத்தில் பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார்.

கனடிய பாராளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஜஸ்டின் டிரிடியு கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படவுள்ளார்.

ஒட்டுமொத்த கருத்துக்கணிப்புகளையும் தகர்த்து 184 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையை நிரூபித்துள்ளது லிபரல் கட்சி.

கன்சர்வேட்டிவ் கட்சியினர் 99 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கட்சியினர் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமருக்கான தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளனர்.

தோல்வியை ஏற்றுக்கொண்ட கன்சர்வேட்டி கட்சியின் ஸ்டீபன் ஹார்ப்பர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் திடீரென Jarry metro ரயில் நிலையத்தில் வந்த ஜஸ்டின் டிரிடியு, அங்கு வந்த பெரும்பாலான மக்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பெற்றதுடன் அவர்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்வு அப்போது அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

justin_selfie_001

Share.
Leave A Reply

Exit mobile version