முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இடையில் பனிப்போர் நிலவிவருவதாகவும் விஜயகலாவினால் இயக்கப்பட்டுவருவதாக சந்தேகிக்கப்படும் பஸ் வண்டிகளின் கொள்வனவு மற்றும் வழி அனுமதிப்பத்திரங்கள் மீது குறிவைக்கப்பட்டுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரரால் இயக்கப்பட்டுவந்த தொலைக்காட்சி சேவையினை கடந்தவாரம் மூடுவதற்கு பிரதான நபராக விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டார் என்பதும் குறித்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமானது எந்தவிதமான அனுமதிப்பத்திரங்களுமின்றியும் வரிச்சலுகைகள் முற்றுமுழுதாக நீக்கப்பட்டு நீண்டகாலமாக இயங்கிவந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சகிதம் குறித்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சென்றிருந்த அமைச்சர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளி மற்றும் ஒலிபரப்பு சேவைகளை நிறுத்தி தளபாடங்களையும் பறிமுதல்செய்திருந்தார்.
இதனால் கடும் விசனமடைந்துள்ள முன்னாள் அமைசருக்கும் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இடையில் நிலவிவந்த பனிப்போரானது தற்போது உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தையடுத்து அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனினால் இயக்கப்பட்டுவருவாத சந்தேகிக்கப்படும் யாழ் கொழும்பு தனியார் பஸ் சேவையின் வழி அனுமதி பத்திரம் மற்றும் பஸ்வண்டிகளின் கொள்வனவு தொடர்பில் குற்றச்சாட்டுகள் தேடப்பட்டுவருவதாகவும் சிறுவர் மற்றும் மகளீர் அமைச்சில் ஊடாக முறைகேடுகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பிலும் அவதானிக்கப்பட்டுவருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது புதல்வரால் இயக்’கப்பட்டுவந்த சி.எஸ்.என் தொலைக்காட்சி சேவையும் பல வருடங்களாக எந்தவித அனுமதிப்பத்திரங்களுமின்றி அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தி வந்த நிலையில் குறித்த நிறுவனம் இவ்வருட ஆரம்பத்தில் மூடப்பட்டமையும் ஒருகோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவின் பூரண செல்வாக்குடன் இந்த தொலைக்காட்சி நிறுவனம் யாழில் இயங்கிவந்ததா என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்தராஜபக்ஸவிற்கு ஆதரவாக முழுநேர சேவையை வழங்கியிருந்த தொலைக்காட்சி நிறுவனம் தனது பணியை பாராளுமன்றத்தேர்தலிலும் வழங்கியிருந்ததுடன் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பான பிழையான அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்ததாக பரவலாக பேசப்படுகிறது.
மகேஸ்வரின் கொலைக்கும் டக்ளஸிற்கும் தொடர்பு உண்டென என விஜயகலாவினால் குற்றஞ்சுமத்தப்பட்டும் மண்டைதீவில் மூடப்பட்டுள்ள பல கிணறுகள் மீள தோண்டப்பட வேண்டும் என கோரப்பட்டமை போன்ற பல பிரச்சனைகளை டக்களஸ் மீது சாடிவரும் அமைச்சர் விஜயகலா தற்போது நேரடியாகவே முண்டி பனிப்போர் உக்கிரமடைந்துள்ள நிலைமையில் அவருக்கு சொந்தமானவை என கருதப்படும் பஸ்வண்டிகளில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரைநிகழ்த்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வர்தகர்களுக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான நெருங்கிய உறவே ஊழல் மற்றும் அரச வழங்கள் மற்றும் அரச சலுகைகளை பிழையாக பயன்படுத்த காரணம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.