கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை, மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க, கொழும்பு பிரதம நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, பிள்ளையான், பிரதீப் மாஸ்டர், கஜன் மாமா ஆகிய மூவரையும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் இந்த அனுமதியை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம், கொழும்பு பிரதம நீதிவானிடம், சமர்ப்பித்து, பிள்ளையானை 3 மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரினர்.

இதையடுத்து, நீதிவான் கிலான் பிலப்பிட்டிய இதற்கான அனுமதியை வழங்கினார்.

பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோருக்கு ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் 3 மாத தடுப்புக்காவல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மூன்று சந்தேக நபர்களையும் வரும் நொவம்பர் 4ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும், குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version