நாஜிக்கள் ஐரோப்பிய யூதர்களை கொல்ல பலஸ்தீன தலைவரே அறிவுரை வழங்கிய தாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு சுமத்திய குற்றச்சாட்டை ஜேர்மனி கடுமையாக நிராகரித்துள்ளது.
இந்த யூதப் படுகொலைகளுக்கு நாஜிக்களே பொறுப்பு என்பதில் ஜேர்மனி மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது என்று அந்நாட்டு அரச தலைவர் ஏன்ஜலா மேர்கல் குறிப்பிட்டுள்ளார்.
பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிடும் போது, ஹிட்லர் யூதர்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றும் தேவையுடையவராக மாத்திரமே இருந்தார், ஆனால் ஜெரூசலம் தலைமை முப்தி ஹாஜ் அமீன் அல் ஹுஸைனே, அவர்களை தீக்கிரையாக்குமாறு அறிவுரை வழங்கினார் என்றார்.
நெதன்யாகுவின் இந்த கருத்தை இஸ்ரேல் வரலாற்றியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கண்டித்துள்ளனர்.
ஜேர்மனி சென்றிருக்கும் நெதன்யாகு மேர்க்கலுடன் இணைந்து உரையாற்றும்போது, “ஹிட்லரே யூதப் படுகொலைக்கு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந் தார்.
எனினும் கடந்த செவ்வாயன்று ஜெரூசலத்தில் உலக சியோனிச மாநாட்டில் உரையாற்றிய நெதன்யாகு, ஹுஸைனே இந்த ஆலோசனையை வழங்கினார் என குறிப்பிட்டார்.
“அப்போதைய நிலையில் யூதர்கள் மீது கடும் போக்கை கையாள ஹிட்லர் நினைக்கவில்லை. யூதர்களை வெளியேற்றவே அவர் விரும்பினார்” என்று அந்த மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.
“ஹாஜ் அமீன் அல் ஹுஸைன், ஹிட்லரிடம் சென்று, நீங்கள் அவர்களை வெளியேற்றினால் எல்லோரும் இங்கு வந்துவிடுவார்கள். அப்போது, அவர்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று ஹிட்லர் கேட்டார். அதற்கு ஹுஸைன், அர்களை தீக்கிரையாக்கிவிடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்” என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.
நெதன்யாகுவின் இந்த கருத்து சர்வதேச அளவில் யூதர்களிடமும் கடும் கண்டன த்தை ஏற்படுத்தியுள்ளது. ‘எமது மக்கள் மீது கொடூரங்களை கட்டவிழ்த்துவிட்ட ஹிட்லரின் பங்களிப்பை குறைக்கச் செய்யும் செயலாகும்” என்று இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் இஸாக் ஹர்சொக் தனது பேஸ்புக் பக்கத்தில் சாடினார்.
1974ஆம் ஆண்டு மரணமடைந்த பலஸ்தீன தேசியவாத தலைவரான ஹுஸைன், 1920கள் மற்றும் 1930களில் இஸ்ரேல் நாட்டை உருவாக்கும் பிரிட்டனின் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவராவார்.
Haj Amin al-Husseini,also known as Mohammed Effendi Amin al-Husseini (Arabic: محمد أمين الحسيني;[6] c. 1897[7][8] – 4 July 1974) was a Palestinian Arab nationalist and Muslim leader in Mandatory Palestine.[9]
Al-Husseini was the scion of a family of Jerusalemite notables,[10] who trace their origins to the grandson of Muhammad.[11] After receiving an education in Islamic, Ottoman and Catholic schools, he went on to serve in the Ottoman army in World War I. At war’s end, he positioned himself in Damascus as a supporter of the Arab Kingdom of Syria. Following the fiasco of the Franco-Syrian War and the collapse of the Arab Hashemite rule in Damascus, his early position on pan-Arabism shifted to a form of local nationalism for Palestinian Arabs and he moved back to Jerusalem.
From as early as 1920, he actively opposed Zionism, and was implicated as a leader of the 1920 Nebi Musa riots. Al-Husseini was sentenced to ten years imprisonment, but was pardoned by the British.[12] Starting in 1921, al-Husseini was appointed Grand Mufti of Jerusalem, using the position to promote Islam, while rallying a non-confessional Arab nationalism against Zionism.[13][14]
During World War II he collaborated with both Italy and Germany by making propagandistic radio broadcasts and by helping the Nazis recruit Bosnian Muslims for the Waffen-SS. On meeting Adolf Hitler he requested backing for Arab independence and support in opposing the establishment in Palestine of a Jewish national home. At war’s end, he came under French protection, and then sought refuge in Cairo to avoid prosecution.
In the lead-up to the 1948 Palestine war, Husseini opposed both the 1947 UN Partition Plan and King Abdullah’s designs to annex the Arab part of British Mandatory Palestine to Jordan, and, failing to gain command of the ‘Arab rescue army’ (jaysh al-inqadh al-‘arabi) formed under the aegis of the Arab League, formed his own militia, al-jihad al-muqaddas.
In September 1948, he participated in the establishment of an All-Palestine Government. Seated in Egyptian-ruled Gaza, this government won a limited recognition of Arab states, but was eventually dissolved by Egyptian president Gamal Abdel Nasser in 1959. After the war and subsequent Palestinian exodus, his claims to leadership, wholly discredited, left him eventually sidelined by the Palestine Liberation Organization, and he lost most of his residual political influence.[15] He died in Beirut, Lebanon, in July 1974.