வயோதிபத் தாயொருவரை அவரது மகனும்  மேலும் மூவரும் சேர்ந்து  தாக்கியதால் படுகாயமடைந்த தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்தனர்.

கணபதி நகர் ரமேஷ்புரத்தைச் சேர்ந்த 58 வயதான  மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது தாய் தனது சகோதரனால் தாக்கப்பட்டமை பற்றி முறைப்பாடு தெரிவித்துள்ள அருமைத்துரை வினோதினி (வயது 30) கூறியதாவது,

சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து விட்டு கடந்த வியாழக்கிழமை வீட்டுக்கு வந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான எனது சகோதரன் சுவேந்திரன் (வயது 32) உடனடியாக எனது வீட்டுக்குள் புகுந்து எனது தாய் தனியாக இருந்த வேளையில் தாயை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

கோயிலுக்குச் சென்றிருந்த நான் வீடு திரும்பிய போது தாய் இரத்த வெள்ளத்தில் நினைவிழந்து கிடந்தார்.

உடனடியாக தாயை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எமது தாயைத் தாக்கிய எனது சகோதரன் உதவியாக மேலும் மூவரை அழைத்துக் கொண்டு வந்து தாயைத் தாக்கியிருப்பது தெரியவந்திருக்கிறது என்றார்.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மனை­வியை தாக்கிக் காயப்­ப­டுத்­திய பின்னர் வேறு பெண்­ணுடன் தலை­ம­றை­வா­னவர் கைது!

12876_surrandமூதூர், கிளி­வெட்டி பகு­தியில் மனை­வியைத் தாக்கி காயப்­ப­டுத்­தி­விட்டு வேறொரு பெண்­ணுடன் தலைமறைவானவரை நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு புதன்­கி­ழமை மூதூர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

மூதூர் பொலிஸ் பிரி­வுக்குட்பட்ட கிளி­வெட்டி பகு­தியில் திரு­மணம் முடித்து ஒரு பிள்ளை கிடைத்­த­வுடன் சந்­தேக நபர் மனை­வி­யுடன் சண்­டை­யிட்டு வந்த நிலையில் மனை­வியை தாக்­கி­ பலத்த காயம் ஏற்­ப­டுத்திய பின்னர் வேறொரு பெண்­ணுடன் தலை­ம­றை­வாகி வாழ்ந்த நிலையில் மனைவியால் மூதூர் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்திருந்தார்.

இத­னை­ய­டுத்து கைது செய்­யப்­பட்ட இவரை மூதூர் நீதி­மன்றில் ஆஜர்ப்­ப­டுத்­திய போதே விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மூதூர் நீதி­மன்ற நீதிவான் ஐ.எம்.றிஸ்வான் உத்­த­ரவு பிறப்பித்தார்.

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version