கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதி சொகுசு மாளிகைக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜ பக்ஷ, தனது பதவிக் காலத்தில் இந்த மாளி கையை நிர்மாணித் திருந்தார். மாளிகையை நிர்மாணிப் பதற்கான நல்ல நேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார். மாளிகையின் உள்ளே நுழைவதற்கு ரகசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் உள்ளே இருந்து கதவை மூடிக் கொண்டால் வெளியில் இருந்து ரகசியக் குறியீட்டின் மூலம் கூட திறக்க முடியாதளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஏசி வசதி, தொலைபேசி, இன்டர்நெட், அகலத்திரை தொலைக்காட்சிகள், சொகுசு இருக்கைகள், நிலமட்டத்திற்கு மேலே ஜனாதிபதி மாளிகையை முழுவதும் நடப்பவற்றை கண்காணிப்பதற்கான கமெராக்கள் என கற்பனை கூட செய்ய முடியாத அளவு நவீன மற்றும் சொகுசு வசதிகள் இந்த மாளிகைக்குள் உள்ளடங்கியிருந்தன.

மாளிகையின் மேற்புறம் நில மட்டத்திற்கு மேலாக இரண்டு அறைகள் கொண்ட ஓய்வு விடுதியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது


குறித்த நிலக்கீழ் மாளிகைக்கு 24 மணிநேரமும் துண்டிக்கப்பட முடியாத வகையில் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை ராஜபக்ஷவினரே நிர்மாணித்துள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மாளிகையின் மாதாந்த மின் கட்டணம் ஒன்றரைக்கோடி செலவாகின்றது. அதில் நிலக்கீழ் மாளிகையின் மின் செலவு மட்டுமே முப்பது லட்சம் செலவாகின்றது.

இதன் காரணமாகவே நான் வேறொரு சாதாரண வீட்டை உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்துகின்றேன். எனது தற்போதைய இல்லத்தின் மொத்த பராமரிப்புச் செலவே மாதாந்தம் ஐந்து லட்சம் மட்டுமே செலவாகின்றது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதன் படங்கள் இவை.

11227636_1639920379629146_3694097651694851258_n a>

Share.
Leave A Reply

Exit mobile version