பெண் குறி வழி பாடு சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது.பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு நடக்கும் விழா.
இப்படியெல்லாம் வணங்குபவன் காட்டுமிராண்டிதானே?
அஸ்ஸாமில் பார்வதிக்கு வருடம் ஒரு முறை மாதவிலக்கு. கேரளாவில் பார்வதிக்கு மாதாமாதம் மாத விலக்கு.

 YONI POOJAI

இதற்கு சொல்லப்படும் கதை.

கைலாயத்திலிருக்கும் சிவன் சொன்னதைக் கேட்காமல் அவர் மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்‌ஷனின் யாகத்தில் கலந்து கொள்கிறாள். அவமானப்படுகிறாள். அது பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்

அவள் தற்கொலையைத் தடுக்க ஓடி வரும் சிவன் 51 பாகங்களாக சிதறிப்போன தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார். காமதேவன் கண்டுபிடித்து வழிபடுகிறான். அந்த யோனி வழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவிலாம்!

அசாம் மாநிலம் – கௌஹாத்தியில் நீலாச்சல் மலைச் சாரலில் அமைந்துள்ளது ‘காமாக்யா’ சக்தி பீடம். அன்னை சதி தேவி (பார்வதி) யின் யோனி பாகம் விழுந்த யோனி பீடமாய் இத்தலம் அறியப்படுகிறது. சக்தி பீடங்கள் அனைத்திற்கும் முதன்மையானது யோனி பீடமே என்று புராணங்கள் அறுதியிட்டுப் போற்றுகின்றன.

அதனால் அந்தயோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள். கற்பாறையில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தப் பாறைப் பகுதியில் நீர் கசிந்து வழிந்து கொண்டிருக்கும்.

ஆண்டுக்கு ஒரு முறை இந்தப் பெண் குறியில் `மாத விலக்கு’ ஏற்படுகிறதாம். ஆண்டுக்கொரு முறை நான்கு நாட்கள் உதிரப் போக்கு ஏற்படுவதால் இதை மாத விலக்கு என்று சொல்லக் கூடாது.

வருஷ விலக்கு எனலாம். இந்தக்கோவிலில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் வாசலை அடைத்துவிடுவார்கள். தேவி தீட்டாகும் நாட்கள். அந்நாட்களில் திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது அந்த 3 நாட்கள் முடிந்தப் பின் மீண்டும் கோவில் வாசல் திறக்கும்.

இந்த மூன்று நாள்களிலும் அந்த நீரில் சிவப்பு சாயத்தைக் கலக்கிச் சிவப்பு நீர் வழிவது போல ஏற்பாடு செய்கிறார்கள்.

`ருது ரத்தம் போலக் காட்சியளிக்கச் செய்கிறார்களாம். மாதாந்திர ருதுவுக்குப் பதில் கடவுளச்சிக்கு வருடாந்திர ருதுதானாம் !

பார்வதியின் மாதவிடாயாக பக்தர்களுக்கு (புனித நீராக) கொடுப்பார்கள்.

உலகெங்கும் இருந்து இந்த மூன்று நாள்களிலும் பத்து லட்சம் பக்தர்கள் அங்கே கூடுவார்களாம். சாதுக்களும், சன்னியாசிகளும், சன்னியாசினிகளும் இங்கே கூடுவார்களாம்.

அந்த மூன்று நாள்களாம் இந்த மூன்று நாள்களும்! பூஜை, புனஸ்காரம் எதுவும் இந்த மூன்று நாள்களில் கிடையாதாம். பூசாரிகளும் பக்தர்களும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த மூன்று நாள்களில் செவ்வாடைதான் அணிய வேண்டுமாம் (மேல் மருவத்தூர் போல) கடவுளச்சியான `காமாக்யாவும் செவ்வாடை தான் அணியுமாம்.

கைம்மையர், பிரம்மச்சாரிகள், பார்ப்பனர்கள் இந்த மூன்று நாள்களில் சமைத்த உணவைச் சாப்பிடக் கூடாதாம். திருமணமாகாத பெண்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டுமாம்.மூன்று நாள்கள் முடிந்ததும் எல்லாரும் வீடுகளைக் கழுவி, துணிகளைத் துவைத்து, ஏனங்களைக் கழவி, வீடு முழுக்க நீர் தெளித்துத் தூய்மைப்படுத்த வேண்டுமாம்.

மூன்றாம் நாள் கடவுளச்சிக்கு `சடங்கு செய்யப்பட்டுக் கழுவிக் குளிப்பாட்டி அதன்பிறகுதான் கோயில் கதவுகள் திறக்கப்படுமாம்.இத்தனை மூடத்தனங்கள் போதாது என்று மூடத்தனத்தின் உச்சமே இனிமேல்தான்.

அப்போது இக்கோயில் நான்கு நாள்களுக்கு மூடப்படுகிறது..கோயில் கிணற்றின் மேல் சிகப்புத் துணி போர்த்தப்படுகிறது.

நான்கு நாள்கள் முடிந்ததும் நாடெங்கும் வந்திருந்த பக்தர்களுக்கு சிவப்புத்துணியில் ஒரு பகுதி அல்லது ஒரு நூலிழை பிரசாதமாக வழங்கப்படுகிறது. மாதாவின் மாத விலக்கு ரத்தம் படிந்தது எனக் கருதப்படும் இது அவர்களுக்கு `மாலை’ யாம்!

இதை வாங்கிப் பூஜை செய்து வந்தால் – நினைப்பதெல்லாம் நடந்து விடுமாம்! அதனாலே அதை வாங்க ஏகப்பட்ட போட்டி, நெரிசல்!

இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. கருவறையிலேயே உயிர்ப்பலி கொடுக்கின்றனர். பலி கொடுத்த ஆடு, கோழி போன்றவற்றின் தலைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

19-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோயிலில் மனிதர்களைப் பலி தருவது வழக்கம். பிரிட்டிஷ் அரசு தடை செய்து விட்டது.

கேரளாவில் செங்கண்ணூர் பகவதி அம்மனுக்கும் மாதா மாதம் ‘அந்த’ மூன்று நாட்கள் !

அசாமில் தான் அப்படி என்றால் தமிழ்நாட்டிலும் இதெல்லாம் உண்டு. இன்றைய கேரளாவில் இருக்கும் செங்கனூர் பகவதி அம்மன் கோவில் கேரளாவில் இருக்கும் சடங்குகளும் வழிபாடுகளும் தமிழருக்கானவைதான். கேரளா என்றவுடன் இன்றைய முல்லைப்பெரியாறு கேரளாவை நினைக்கவேண்டாம்.

கேரளாவில் செங்கண்ணூர் அம்மன் என்ற கோயில் ஒன்று இருக்கிறது. இந்த அம்மனுக்கு மாதா மாதம் மாதவிடாய் வருமாம். அதனால்தான் அந்த அம்மனை யாரும் ஒளிப் படம் (போட்டோ) எடுக்க அனுமதிப்பதில்லையாம்.

அதெல்லாம் சரி.. மாதா மாதம் மாதவிடாய் வரும் இந்தப் பகவதி அம்மன் கோயிலுக்காவது பெண் அர்ச்சகர் ஒருவரை நியமிக்கக் கூடாதா?

மாதவிடாய் வருவதால் ஏற்படும் எல்லாவற்றையும் கவனித் துக் கொள்ள தடியனான ஆண் அர்ச்சகன்தான் இருக்க வேண் டுமா? இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது – இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்!

சிலப்பதிகாரம் செங்குட்டுவன் காலத்து மலையாள பூமி. இந்தப் பகவதி அம்மன் கோவில் தீட்டுத்துணி ரொம்பவும் பிரசித்திப் பெற்றது. இந்த தீட்டுத்துணி எவரிடமிருக்கிறதோ அவருக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமாம்.

அதனால் தான் முதலமைச்சர் முதல் நீதிபதிகள் வரை இந்த தீட்டுத்துணியை வாங்கிச் செல்ல போட்டி. பலவருடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

செங்கண்ணூர் மஹாதேவர் க்ஷேத்ரம். சபரிமல எடத்தாவளம் , செங்கண்ணூர் தேவஸ்வம் என்ற போர்டு. சபரிமலைக்குப்போகும் பக்தர்கள் அனைவருமே பயணத்தினிடையில் இங்கு வந்து, மஹாதேவரையும் பகவதியையும் தரிசனம் செஞ்சுட்டுத்தான் போவாங்களாம்.

பாரதப்போரில் அசுவத்தாமா (என்ற யானை) இறந்துவிட்டது உண்மைன்னு, பொய் சொன்ன தருமர், இங்கே வந்து மஹாதேவரையும் பகவதியையும் வழிபட்டு தன் பாவத்தை மன்னிக்கும்படி வேண்டினாராம்.

அம்பத்தியோரு துண்டுகளா வெட்டப்பட்ட சதியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களைத்தான் சக்தி பீடம் என்று சொல்றாங்க.

சதியின் அடிவயிற்றுக்குக் கீழே உள்ள அரைப்பகுதி விழுந்த இடம் இது என்று கோவில் சொல்லுது.. அஸ்ஸாமில் இருக்கும் காமாக்யா கோவிலையும் இப்படி இதே பாகம் விழுந்த இடமுன்னுதான் சொல்றாங்க. உடலைத் துண்டாக்கி எறியப்பட்ட போது இடுப்பின் கீழுள்ள அரைப்பகுதி இங்கேயும் அஸ்ஸாமிலுமா அரை அரையா விழுந்துச்சுன்னு வச்சுக்கலாம்.

இந்தக்கோவிலில் ஒரு சிறப்புத்திருவிழா நடக்குது. த்ரிப்பூத்தராட்டு என்ற பெயர் இந்த விழாவுக்கு. பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு நடக்கும் விழா.

தினமும் காலை அபிஷேகத்தின் போது முதல்நாள் சாமிக்கு உடுத்தி இருந்த புடவையைக் களையும்போது அதில் இருந்த ஒரு கறையைக் கண்ட மேல்சாந்தி (அர்ச்சகர்) புடவையை , கோவிலுக்குப் பொறுப்பான பாரம்பரிய (தரவாடு) மடமான வங்கிப்புழாவில் இருக்கும் மூத்த பெண்களிடம் கொண்டுபோய்க் காட்டியிருக்கார்.

அவர்கள் இது வீட்டு விலக்கான தீட்டுஅடையாளம் என்றதும். அம்மன் சிலையை அங்கிருந்து எடுத்து இன்னொரு அறையில் வச்சு, மூத்த பெண்கள் வெளியில் காவலுக்கு இருக்க ஏற்பாடு செஞ்சுருக்காங்க.

மூணுநாள் இப்படி வேறொரு அறையில் தங்கிய அம்மனை நாலாம் நாள் அருகில் உள்ள ஆற்றுக்குக் கொண்டுபோய் நீராட்டி ( ஆராட்டு) அலங்கரிச்சு யானை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கோவிலுக்குக் கொண்டு வந்து அம்மனின் சொந்த இடத்தில் கருவறையில் மீண்டும் வைக்கிறாங்க.

இளம் கன்னியர் பூப்பெய்ததும் நடக்கும் விழா போலத்தான். அம்மன் மீண்டும் கோவிலுக்குள் வரும் சமயம், சிவன் வாசலில் நின்று வரவேற்று, பிரகாரங்களில் இருவரும் ஊர்வலமாகப்போய் பின்னே தனி சந்நிதிகளுக்குப் போயிருவாங்களாம்.

இந்தியாவில் வேறெங்கும் இப்படி ஒரு விழா நடப்பதே இல்லையாம். ஐ மீன் சாமிக்கு. சாமிக்கு அதிலும் பஞ்சலோக விக்ரஹத்துக்கு இப்படியெல்லாம் நடக்குமான்னு கேள்வி கேட்கக் கிளம்பாம இருந்தால் நல்லது.

அசுரனை வதைத்த நாள், போருக்குப்போய் சம்ஹாரம் செய்தது, ஜென்ம நக்ஷத்திரம் (பிறந்தநாள்) திருக்கல்யாண உற்சவங்கள், இப்படி எல்லாம் நடத்தும்போது, இதையும் நடத்தினால் தப்பே இல்லை.

கொண்டாட்டங்கள் எது என்றாலும் ஊர்மக்கள், சொந்தபந்தம் எல்லாம் சேர்ந்து கூடிக்களித்து, ஆக்கித் தின்னு மகிழ்ச்சியா இருப்பதற்குத்தானே வழி செய்யுது.

ஆதிகாலத்தில்(!) மாதா மாதம் நடந்துக்கிட்டு இருந்த விழா இப்போ சில வருசங்களா வருசத்துக்கு மூணு, இல்லை நாலுமுறைன்னு நடக்குதாம்.

மே பி பகவதி இஸ் கோயிங் இன்டு மெனொபாஸ். வருங்காலத்தில் இந்த விழா நின்னு போனால்கூட வியப்பில்லை. மக்கள் சிந்தனைகள் மாறி வர்றதுக்கு ஏற்பதான் கோவில்களும், சாமிகளும் இல்லையா?

இன்னொரு கதையும் இந்த பகவதிக்கு இருக்கு. இந்த பகவதிதான் சிலப்பதிகாரத்துக் கண்ணகி என்பவர்களும் உண்டு.

மதுரை மாநகரை தீக்கிரையாக்கிட்டு அங்கிருந்து விடுவிடுன்னு நடந்து இங்கே வந்து இந்தச் செங்குன்றுமேல் ஒரு மரத்தடியில் நின்னு தவம் செய்தாள். அப்பதான் கோவலன், இந்திரனுடைய புஷ்பக விமானத்தில் வந்து அவளை தேவலோகம் கொண்டு சென்றான் என்று ஒரு கதை. இதே கதையை கொடுங்கல்லூர் பகவதிக்கும் சொல்றாங்க.

ஆடி மாதத்தில் நல்லவிதமான மங்கலகரமான காரியங்கள் நடக்கக் கூடாது என்று சொன்னால் புரோகிதர்களின் பக்தித் தொழில் நடக்க வேண்டாமா?

கோயில் விழாக்களுக்கு மட்டும் பஞ்சம் கிடையாது. உருவமற்றவர் கடவுள் என்று கதைப்பார்கள். ஆனால் நாட்டு நடப்பு என்ன? வீதிக்கு வீதி கோயில்கள்! ஒவ்வொருவிதமான கோயில் சிலைகள்.

சிவன் என்றால் ஒரே மாதிரியான உருவம் எல்லாக் கோயில்களிலும் இருக்காது. அதிலும் பலபல உருவங்கள் அவற்றிற் கெல்லாம் தனித்தனித் தலப் புராணங்கள், கட்டுக் கதைகள்.

விஷ்ணு என்றாலும் அப்படியே! மனிதனுக்கு என்னென் னவெல்லாம் நடக்குமோ அவ் வளவும் இந்தக் கடவுள்கள் மீதும் ஏற்றி வைக்கப்பட்டதுதான் படுதமாஷ்!

நாகப்பட்டினத்தில் நீலாய தாட்சி என்னும் கோயில்; இந்த அம்மனுக்கு ருது சாந்தி விழா வாம்! புரியவில்லையா! இந்த அம்மன் ருதுவாகிவிட்டாளாம். இதற்காக வருடம் தோறும் ஆடிப் பூரம் என்று சொல்லி பத்து நாள் திருவிழாக் கூத்தாம்.

ஆமாம். அந்தச் சிலைதான் உலோகங்களால் செய்யப்பட்டதாயிற்றே! அம்மணி ருது ஆனதை எப்படி கண்டுபிடித்தார்களாம்?

இன்னொரு கூத்து; இதையும் கொஞ்சம் கேளுங்கள். நெல்லை காந்திமதிக்குச் சீமந்த விழாவாம்! புரியவில்லையா? வளையல் காப்புவிழாவாம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆடி மாதத்தில் 10 நாட்கள் இந்த அம்மணிக்கு விழா; அதில் நான்காம் நாள் தான் இந்தச் சீமந்த விழாவாம்!

அப்படியே பார்த்தாலும் சீமந்தம் என்பது ஒரு தடவை தானே நடக்கும். அதுவும் முதல் பிரசவத்துக்கு முன்னதாக. நெல்லை காந்திமதிக்கு மட்டும் அது எப்படி ஆண்டுதோறும் சீமந்தம் விழா?

இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! இது அர்த்தமுள்ள இந்துமதம் அல்லவா!

ஹி… ஹி… ஹி….

பணத்தை தேடித் தேடி அலையாதே. பெண்களை நம்பாதே – சங்கரர்.( இந்து மதம் எங்கே போகிறது? பகுதி–15)

பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். ‘பெண்களை நம்பாதே’ பணத்தை தேடித் தேடி அலையாதே. பணத்தால் திவலை அளவு கூட நன்மையில்லை. பணத்தால் சத்யம் சாகடிக்கப்படும். சங்கரர் அத்வைத குட்டையைக் குழப்பிவிட்டார்

பஜ கோவிந்தத்தில் ஆதி சங்கரர் சொன்ன சேதிகளை யெல்லாம் அவரைப் பின்பற்றக் கூடியவர்கள் நிஜ கோவிந்தமாக காதில் வாங்கினார்களா? கடை பிடிக்கிறார்களா? பானை சோற்றுக்கு பதச் சோறாக சில ஸ்லோகங்களை மட்டும் பார்க்கலாம். .

‘அர்த்தம் அனர்த்தம் பாவைய நித்யம் நாஸ்தி தகஹா சுக வேஸஹா சத்யம்’

இதுவும் “பண” பக்தி பற்றிய ஸ்லோகம் தான். பணம் என்பதற்கு ஒன்றுமில்லை என்று தான் பொருள். பணத்தால் திவலை அளவுகூட நன்மையில்லை. பணத்தை தேடித் தேடி அலையாதே. பணத்தால் சத்யம் சாகடிக்கப்படும்.

உனக்குள்ளேயே கலகங்கள் நடக்கும். பணம் சம்பாதிப்பதைவிட அதைக் காப்பாற்றுவது கஷ்டம். நீ பணக்காரன். ஆனால், மித்ரன்கூட சத்ரு ஆகி விடுவான். அதாவது நண்பன் கூட பகைவன் ஆகிவிடுவான் என்ற ஆதிசங்கரர்,

‘புத்ராதபி தனபாஜாம் பீதிஹி’ என்றும் சொல்லுகிறார். இதற்கென்ன அருஞ்சொற் பொருள்? பணக்காரனுக்கு தன் மனைவி மக்களால் கூட ஆபத்து, பீதி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

இவ்வாறு, மண்ணாசை, பொன்னாசை உள்ளிட்ட ஆசைகளுக்கு அடித்தளமான, பணத்தை பற்றி குறிப்பிட்டுக் காட்டி எச்சரிக்கும் ஆதிசங்கரர் அடுத்து முக்கியமாக…

பெண்ணாசையைப் பற்றி பொட்டில் அறைந்தாற் போல ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்:

“நாரீஸ் தனபர நாபீதேசம்த்ரிஷ்டவா மாதாமோஹாவேஸம்…” என்று போகிற இந்த சமஸ்கிருத கவிதையின் சாராம்ஸமே. ‘பெண்களை நம்பாதே’ என்பதுதான்.

பெண்கள் தங்களது பாவங்களையும், பாகங்களையும் காட்டி உங்களை மயக்கப் பார்ப்பார்கள். அவள் இருண்ட கேஸத்தில் சிக்கிக் கொண்டு நீ மோசம் போய்விடாதே.

அந்த சிரிப்பு என்ற நெருப்பில் மாட்டிக் கொண்டு மாய்ந்து போய்விடாதே.

முக்கியமாக பாவி, பெண்களின் மேல் பாகங்களைப் பார்த்து மயங்கி விழுந்து விடாதே. பின்னர் அதிலிருந்து நீ எழுந்திருக்கவே முடியாது.

அதனால் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள். உலகில் யாவும் பொய். பொண்ணு பொய். அவளது மெய் (உடம்பு) யும் பொய்.- என எச்சரிக்கை விடுக்கிறார் அன்றே ஆதிசங்கரர்!

இன்று நாம் சகஜமாக செய்தித்தாளில் படிக்கிற பல செய்திகளையும் வைத்துப் பார்க்கிறபோது, சந்யாசிகள் முதல் கொண்டு சினிமாப்பட ரசிகர்கள் வரைக்கும் சங்கரரின் அறிவுரை மற்றும் எச்சரிக்கை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?

ஒரு பக்கம் தீவிர கட்டுப்பாடுகளுடன் சந்யாசத்தை தழுவிக் கொண்ட சங்கரர் வேத கர்மாக்களை எதிர்ப்பதிலும் அதி தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார்.

அதற்காக… தான் சந்யாசியான க்ஷணத்திலேயே தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.

இதைவிட முக்கியமாக பிராமணர்களுக்கு வேத கர்மாக்களை செய்வதற்கு பிரதானமாக இருக்கக்கூடிய யக்ஞோபிதம் அதாவது பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர்.

வேதம் பொய். அதன் கர்மாக்கள் பொய் என்ற நிலையில் தன் தோள்பட்டையில் பூணூல் என்னும் பொய்யை எப்படி தாங்கிக் கொண்டிருப்பது என்ற சிந்தனையின் அடிப்படையில் தான் அதை கழற்றி எறிந்தார் சங்கரர்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் தான் சங்கரர் மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சிகை (குடுமி) யக்ஞோபிதம் (பூணூல்) ஆகிய இரண்டும் கர்மாக்கள் செய்கையிலே பிராமணர்களுக்கு பிரதானம் என சாஸ்திரங்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில்…

சங்கரர் தடாலடியாக குடுமியை மழித்து, பூணூலை கழித்து சந்யாசியான விதம் அவர்களை அதிருப்தியாக்கியது.

சங்கரரின் இந்த செய்கைகள் ஏற்படுத்திய கோபத்தின் மீது இன்னொரு கோப அடுக்கை ஏற்படுத்தின – . அவரது உபதேசங்கள்.

இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியிலே நான் குறிப்பிட்டுக் காட்டியதை போல… குழந்தாய்.. இந்தா பால், இதைக் குடித்து வளமோடு வாழு என்கிறது வேதம்.

உனக்கென உன்னை நம்பும் பெண்ணோடு இணைந்து வாழ்க்கையைச் சுகமாக நடத்துவாயாக. இதெல்லாம் கூடாது என சந்யாசம் பேசி வருபவர்களைச் சமூகத்துக்குள்ளேயே விடக்கூடாது. அவர்களை விரட்டியடியுங்கள் என சொல்கிறது வேதசாரம்.

இன்னும் உபநிஷது சொல்வது என்னவென்றால் ஜானாதீ இச்சதீ யததே…? அதாவது நாம் பார்ப்பதன் மேல் அறிவானது ஆசை கொள்ளும்.

ஆசையின் மிகுதியால் அந்த பொருளை அடைய பிரயத்தனம் செய்யும். பிரயத்தனம் செய்து அந்த ஆசைப்பட்ட பொருளை அடைந்தால் அதுதான் ஆனந்தம். இந்த ஆனந்தமே வாழ்க்கை.

ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து முயற்சியில் வெற்றிபெற்று ஆனந்தப்படுவது தான் அறிவு -என்கிறது உபநிஷது.

ஆனால் சங்கரரின் அத்வைதம்… இவைகளுக்கு எதிரானவையாக இருந்ததால் வேதக்காரர்கள் சங்கரர் மீது சரமாரியாக கருத்துத் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்நிலையில் தான் சங்கரரை பின்பற்றியவர்களிலேயே இரண்டாக சிறு பிளவு ஏற்பட்டது.

உலகமே மாயம் என்று மாயாவாதத்தை ஒரு பிரிவினரும், மாயம் அல்ல, அது நம் அக்ஞானம் என்று ஒரு பிரிவினரும் முளைத்தனர்.

சங்கரர் முழுக்க முழுக்க தன் தத்துவத்தை “Educated Class” அளவிலேயே கூறி வந்ததால், இந்த பிளவும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

மாறாக, வேதபககாரர்களின் எதிர்ப்பை சமாளிக்க சங்கரரே ஒரு முரண்பாட்டை சூடிக்கொண்டார். “வேதோ நித்யமதிய தாம்ததுஉதிதம் கர்ம ஸ்வனுஷ்டேதாம்காம்யே மதிஹி” அஃதாவது சித்த சுத்தியுடன் வேதம் சொன்ன கர்மாக்களை செய்தால் மோட்சம் எளிதில் பெறலாம் என்ற ரீதியில் சங்கரர் சொல்லி அத்வைத குட்டையைக் குழப்பிவிட்டார்.

— அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)

Share.
Leave A Reply

Exit mobile version