ரியாத்: சவுதி அரேபியா மன்னர் சல்மான் பதவி விலக வேண்டும் என்று அவரது தம்பிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மன்னராக பதவி வகித்து வந்த அப்துல்லா, கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் காலமானார்.
அதனைத் தொடர்ந்து புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் (79) பதவியேற்றார்.
இந்நிலையில், சல்மான் பதவி விலகும் படி அவரது 8 தம்பிகள் வலியுறுத்தியுள்ளனர். சல்மானுக்குப் பதிலாக இளவரசர் அகமது பின் அல்துல் அஜிஸ் (73) என்பவரை மன்னர் ஆக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் உள்துறை அமைச்சரான அஜிஸுக்கு இஸ்லாமிய மத தலைவர்கள் மற்றும் உலமாக்களின் ஆதரவு உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது மகன் முகமது பின் சல்மானை துணை பட்டத்து இளவரசராக மன்னர் சல்மான் நியமித்தார்.
மேலும், மறதி நோயினால் அவதிப்படும் மன்னர் சல்மான் விரைவில் பதவியை துறந்து விட்டு தனது மகன் முகமது பின் சல்மானை மன்னர் ஆக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசின் முக்கிய முடிவுகள் மன்னர் சல்மானின் ரகசிய உத்தரவுகள் அனைத்தும் இவர் மூலமே பிறப்பிக்கப்படுகின்றன.
எனவே, முகமது பின் சல்மானை சவுதி மன்னராக்க தற்போதைய மன்னர் சல்மானின் தம்பிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை.
மேலும், அதிகாரம் முழுவதும் மன்னர் சல்மானின் குடும்பத்துக்கும், அவரது வாரிசுகளுக்கும் செல்வதாக கருதி தற்போது அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது தொடர்பாக அதிருப்தி இளவரசர் ஒருவர் இது தொடர்பாக எழுதிய கடிதம் ஒன்று ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பிகளின் எதிர்ப்பால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற சூழல் நிலவுகிறது.
துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான் ராணுவ அமைச்சராகவும் இருக்கிறார்.
அவரது முடிவின்படிதான் ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய படைகள் மறைமுக போரில் ஈடுபட்டுள்ளன. இதனால் சவுதி அரேபியாவில் தேவையற்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/saudi-arabia-eight-king-salman-s-11-surviving-brothers-want-to-oust-him-238396.html?utm_source=spikeD&utm_medium=LT&utm_campaign=adgebra

Share.
Leave A Reply

Exit mobile version