சென்னை: நடிகர் சங்கத்தின் நலனுக்காக ரூபாய் 10 லட்சத்தை நடிகர் சூர்யா நன்கொடையாக அளித்தார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பல போராட்டங்கள், பிரச்சினைகள், மோதல்கள் ஆகியவற்றிற்குப் பின்னர் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற பின்னர் இன்று முதல் செயற்குழு கூட்டத்தை சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் நிர்வாகிகள் நடத்தினர்.
இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நடிக, நடிகையர் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தின் முடிவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சூர்யா நடிகர் சங்கத்தின் நலனுக்காக ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவ்வாறு நடிகர்கள் அளிக்கும் நன்கொடையை சங்கத்தின் நலனுக்காக செலவிட புதிய நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் “நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டுவதற்காக கலை நிகழ்ச்சி நடத்த மாட்டோம்.
இளம் நடிகர்கள் சேர்ந்து தனியாக சினிமா எடுத்து நிதி திரட்டுவோம், நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.
Press Meet after Nadigar Sangam’s Newly Elected Executive Committee Meeting