பாடசாலையில் 11 ஆம் தரத்தில் பயிலும் மாணவியான தனது மகளை ஆறு மாத கர்ப்பிணியாக்கிவிட்டு தந்தை ஒருவர் தலைமறைவான சம்பவம் புத்தளம், மணல்குன்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
புத்தளம், பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே தலைமறைவாகியுள்ள சந்தேக நபராவார்.
16 வயதான பாதிக்கப்பட்ட சிறுமி இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுத இருப்பவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் காதி நீதிமன்றில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்றவர்களாவர்.
இந்தச் சிறுமி தம்பி, அவரின் தங்கை, தந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
சந்தேக நபரான தந்தை தனது மூத்த மகளான சிறுமியை நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார் என தெரிய வருகிறது.
இந்நிலையில், சிறுமி நோய் வாய்ப்பட்டுள்ளார்.
சிறுமியின் பாட்டியும் தந்தையின் மூத்த சகோதரியும் சிறுமியை வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.