இஸ்ரேலை கைப்பற்றப்போவதாகவும் யதர் களை கொல்லப்போவதாகவும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு முழுமையாக ஹிப்ரூ மொழியிலான பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ். குழு ஹிப்ரூ மொழியில் இஸ் ரேலை எச்சரித்து வீடியோ அனுப்புவது இது முதல்முறையாகும். “பலஸ்தீனம் மற்றும் ஜெரூசலத்தில் ஒரு யூதர் கூட விட்டு வைக்கப்படமாட்டார்கள்” என்று 16 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எதிர்காலத்தில் நடக்கப்போவதை ஒப்பிடும் போது இப்போது நடப்பதெல்லாம் சிறு பிள்ளைகளின் விளையாட்டாகும். உண்மையான யுத்தம் இன்னும் ஆரம்பமாகவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ்ஸின் பிரசார ஊடகத்தின் மூலம் சிரியாவில் இருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோ, சரளமான ஹிப்ரூ மொழியில் அமைந்துள்ளது.

jews_is_002“உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஒன்றாக வந்து உங்களை படுகொலை செய்து குப்பை தொட்டியில் வீசினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள்” என்று வீடியோவில் ஐ.எஸ். உறுப்பினர் எச்சரித்துள்ளார்.

1916 ஆம் ஆண்டின் சைக்ஸ்-பிகொட் உடன் படிக்கை உருவாக்கிய நாடுகளின் எல்லைகள் உடைக்கப்படும் என்றும் அந்த நபர் எச்சரித்தார்.

சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். அமைப்பினர் பிரித்தானியாவை விட நிலப்பரப்பில் சிறிதளவு அதிகமான பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply

Exit mobile version