தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது பிரத மர் கொடுத்த பிச்சையாகும்.
அது உரிமை யாகக் கிடைக்க வில்லை எனத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யார் யார் நம்பிக்கை இழந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல் நிலைவரம் குறித் துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது கிடைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவி உரிமையாக கிடைக்கவில்லை.
இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொடுத்த பிச்சை. இப்பதவி வேறு ஒருவருக்கு வழங்கினால் இடையூறுகள் வரும் என்பதால் சம்பந்தனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வருந்தியே பெற்றார்.
இதனால் இவருக்கு கட்டுப்போடப்பட்டுள்ளது. இப்பதவியால் அவர் உயர்த்தப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் ஒரு சிலவாய்ப்புக்கள் இருக்கலாம். குறிப் பாக வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைக்கலாம். வெளிநாடுகள் சென்று கதைக்கமுடியும். ஆனால் தார்மீக பொறுப்புகிடையாது.
இதேவேளை, முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக அமிர்தலிங்கம் இருந்தமை அவருக்குக் கிடைத்த உரிமை. அதாவது தேர்தல் நடைபெற்ற பின்பு முறையாகக் கிடைத்த உரிமையாகும்.
அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தமையால் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் சுதந்திரதின விழாவின்போது பிரதம விருந்தினராக அழைத்து பங்குபற்றி தமிழ் மக்களின் பிரச்சினையை வெளிக்காட்டினார். இன்று சம்பந்தனால் அவ்வாறு செயற்படமுடியுமா?
இன்றைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யார் யார் என்றுகூறமுடியாத சூழல் காணப்படுகிறது. தற்போது வித்தியாசமான சூழல். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இவ்வாறான ஒரு சூழல் காணப்பட்டாலும் எதிர்க்கட்சித் தலைவர் மக்களின் பிரச்சினையை கதைக்கவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யார் யார் நம்பிக்கை இழந்துள்ளார்களோ அவர்கள் எம்முடன் இணைந்து கொள்ள லாம். தமிழ் மக்களை கூட்டமைப்பு ஏமாற்றி வருகிறது. இதனை இனியும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இது தொடர்பில் என்னு டன் பலரும் பேசி வருகிறார்கள் என்றார்.