முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று மீண்டும் பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சிலர் இன்று முற்பகல் பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்தனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு 200 மில்லியன் நட்டம் ஏற்பட்டமை தொடர்பிலான விசாரணைக்கே முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஸில் டி சில்வா தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் வரை ஆணைக்குழுவில் இருந்தார்.
காணொளியில் காண்க…
இன்றைய இலங்கை செய்திகள்