தகாத உறவில் பிறந்த குழந்தைக்கு அப்பாவி இளைஞனை அப்பாவாக்கி அவரிடமிருந்து தாபரிப்புப் பணத்தைப் பெற முயன்ற பெண்ணொருவரின் குட்டு நீதிமன்ற விசாரணைகளில் அம்பலத்துக்கு வந்துள்ளது.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் கடந்த -11 ஆண்டுகளாக நடந்த இந்த சுவாரசியமான வழக்கின் தீர்ப்பு நேற்று புதன்கிழமை(28-10-2015) வழங்கப்பட்டது.இதன் போதே குறித்த பெண்ணின் குட்டும் வெளிப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நாவற்குழி தச்சன் தோப்பைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு அந்த இடத்தைச் சேர்ந்த இளைஞரொருவரே காரணம் எனக் கூறி அவரிடமிருந்து தாபரிப்புப் பணத்தைப் பெற்றுத் தருமாறு சாவகச்சேரி நீதிமன்றத்தில் கடந்த வருடம் -20 ஆம் திகதி வழக்கொன்றைத் தாக்கல் செய்தார்.

ஆனால் அக்குழந்தை உருவாகத் தான் காரணமில்லை எனக் குறித்த இளைஞர் சட்டத்தரணி ஊடாக மறுதலிப்புச் செய்திருந்தார்.தான் மரபணுப் பரிசோதனை மூலம் அதனைத் தான் நிரூபிக்கத் தான் தயார் எனவும் கூறினார்.

கடந்த -11 மாதங்களாகத் தவணை முறையில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞரின் மரபணுப் பரிசோதனை அறிக்கையில் இளைஞர் பெண்ணின் குழந்தைக்குத் தந்தையில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.

இளைஞர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே முறையற்ற தொடர்பால் குழந்தையொன்று பிறந்ததாகவும் சுட்டிக் காட்டியதையடுத்து நீதவான் ஸ்ரீ நிதி நந்தசேகரன் இளைஞரை நிரபராதி எனக் கூறி வழக்கிலிருந்து இளைஞரை விடுவித்தார்.

இனிவரும் காலத்தில் ஆண்களுக்கு எதிராக இவ்வாறான பொய் முறைப்பாடு செய்தால் குறித்த பெண்ணை விளக்க மறியலில் வைக்க வேண்டி ஏற்படுமெனவும் எச்சரித்ததுடன் குறித்த இளைஞருக்கு மரபணுப் பரிசோதனை மற்றும் வழக்குச் செலவு ஆகியவற்றிற்குச் செலவிட்ட 14 ஆயிரத்து 750 ரூபாவைச் செலுத்துமாறும் பெண்ணுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version