சிவப்பு கடற்கரை (Red Beach) என்ற பெயரை கேட்டவுடனே எல்லோருக்குமே அதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயமாக வருகிறது.
பீச் என்றாலே நமக்கு மணல்தான் நினைவுக்கு வரும். ரெட் பீச் என்றதும் அங்கு மட்டும் சிவப்பு மணல் இருக்குமோ அல்லது கடலே சிவப்பாக இருக்குமோ என்ற ஆர்வம் இன்னும் கூடுகிறது.
இந்த செடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வளரவில்லை. கடற்கரையில் பல மைல்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தாற்போல வளர்ந்திருக்கின்றன.
ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வளரும் இந்த செடிகள். கோடைகாலத்தில் பச்சை பசேலென காட்சியளிக்கும். தாவரங்கள் வழக்கமாக பச்சை நிறத்திலிருந்து பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்துக்கே மாறும்.
ஆனால், இந்த சீ வீட் சூடா செடிகள் செக்கச்சிவந்த நிறத்துக்கு முழுமையாக மாறுகின்றன.
இலையுதிர் காலத்தில் கடற்கரை முழுவதும் அடர்ந்து சிவந்து காட்சியளிக்கும் கோலம் உலகில் வேறு எங்குமே காணமுடியாத அப்படி ஒரு அழகு.
இந்த செம்மை செடிகளுக்கு மேலும் அழகூட்ட 260 வகையான பறவையினங்களும் அங்கு வாழ்கின்றன, வருகின்றன.
399 வகையான அபூர்வ வனவிலங்குகளும் அங்கு வாழ்கின்றன. நீளமான நீலகடலும் சிவப்பு கரையும் பலவகை பறவைகளும் விலங்குகளும் பயணிகளை மகிழ்விக்க தவறுமா என்ன.?
இந்த சிவப்பு பீச் பஞ்சின் நகருக்கு தென்மேற்கே 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
பஞ்சின் நகரம் பீஜிங் நகருக்கு வடகிழக்கில் லியோடாங் வளைகுடாவுக்கு அருகாமையில் உள்ளது. அது லியோனிங் மாகாணத்தை சேர்ந்தது.
பீஜிங்கிலிருந்து ஒருநாளைக்கு 7 முறை சிவப்பு பீச் வழியாக ரயில் செல்கிறது. அதனால், இங்கு செல்ல எளிய வழியாக ரயில் பயணமே கருதப்படுகிறது.
பீஜிங்கிலிருந்து செல்லும் ரயிலில் ஏறி பஞ்சிங் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம்.
விரைவு ரயில் 3.5 மணி நேரத்திலும் சாதாரண ரயில் 6 மணி நேரத்திலும் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பீஜிங், டியாஞ்சிங், மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து பஞ்சிங் நகருக்கு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.