அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஹோட்டல் உரிமையாளர் கொலை பெரும் பரபரப்பையும் ,அதன் பின்னரான அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பலர் இதுவரை கைதாகியுள்ளனர்.

இக் கொலை வழக்கில் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் , இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் எனத் தெரிவிக்கப்படும் எஸ்.எப் லொகு என்ற நபர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றார்.

அவர் தற்போது அனுராதபுரத்திலிருந்து தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவரது பேஸ்புக் கணக்கில் மேற்படி சம்பவம் தொடர்பிலான எனக் கருதப்படும் நிலைத்தகவல் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் “எங்களுக்கு மற்றும் சமூகத்துக்கு பிழையான செயல்களை செய்தவர்கள் மீண்டும் அவதானமாக இருங்கள் , அனுராதபுரத்தில் பாதாள உலக செயற்பாடுகளை மீண்டும் புதுப்பிப்போம்- Coming Soon – ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 rw

அநுரதபுரத்தைச் சேர்ந்த கராத்தே வீரரை மனிதாபினமற்ற முறையில் அடித்து துன்புறுத்தி கொலை செய்ததோடு, மேலும் இருவரை மிக மோசமாக தாக்கி காயப்படுத்தி, விடுதிக்கும் சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இரோன் ரணசிங்க (26) மற்றும் அவரது தம்பி அசித ரணசிங்கவின் (24) கடவுச்சீட்டை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு இன்று (29) அநுராதபுர பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய உமேஷ் சானக முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளித்த அநுராதபுர பொலிஸ் மத்தியநிலைய, வழக்கு செயற்பாட்டுப் பிரிவு, இவ்வழக்கு தொடர்பில் தேடப்படும் பிரதான சந்தேகநபர்கள் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற கோப்ரல் மற்றும் அவரது தம்பி ஆகியோர் தலைமறைவாகி இருப்பதாகவும், வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் இரகசியமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது.

இதனை அடுத்தே, அவர்களது கடவுச்சீட்டை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளதோடு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை விமானநிலையங்களின் கட்டுப்பாட்டாளர்களுக்கு இதனை அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

ஆயினும் இரோன் ரணசிங்க எனும் பெயரில் உள்ள பேஸ்புக் கணக்கில் குறித்த பிரதான சந்தேகநபரான இராணுவ கோப்ரல் தமது இடுகைகளை இட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version