அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகர மேயராக இலங்கைப் பெண் ஒருவர் முதல்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா இரட்ணம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார்.
சமாந்தா, தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து தோ்தலில் வெற்றியீட்டியுள்ளதுடன், இதற்கு முன்னர் இரு தடவைகள் மேயர் பதவிக்காக போட்டியிட்ட போதிலும் வெற்றிபெறவில்லை.
இலங்கையில் பிறந்த சமந்தா இரட்ணம், உள்நாட்டு யுத்தம் காரணமாக பெற்றோருடன் கடந்த 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.
வெற்றியைப் பொறுத்தவரை கடந்த இரு வருடங்களைவிட இவ் வருடம் அதிக நம்பிக்கையுடன் இருந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர் நியமனம்
30.10-2015
இது அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக கருதப்படுகிறது.நேபாளத்தின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இரண்டாமவராக பித்யா தேவி பந்தாரி (54 வயது) விளங்குகிறார்.
தற்போது அவர் நேபாள ஆளும் பொதுவுடைமை கட்சியின் உப தலைவராக உள்ளார்.அவர் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நேபாளத்தின் பாதுகாப்பு அமைச்சராக சேவையாற்றியுள்ளார்.
இந்த மாத ஆரம்பத்தில் நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. ஷர்மா அலி தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பித்யா தேவி பந்தாரி பிரதமரின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தைச் சேர்ந்தவராவார்.
ஆண்கள் செல்வாக்குப் பெற்று விளங்கும் நேபாள அரசியலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் பெண்ணொருவராக பித்யா தேவி பந்தாரி விளங்குகிறார்.
அவர் நேபாளத்தில் முடியாட்சி கலைக்கப்பட்ட பின்னர் 2008 ஆம் ஆண்டில் அந்நாட்டின் முதலாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ராம் பரன் யாதவின் இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.