சட்டவிரோதமான முறையில் மணல் மண்ணினை கடத்தி செல்ல முற்பட்டவரை நெல்லியடி பொலிசார் சுமார் 25 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்று கைது செய்துள்ளனர்.

வடமராட்சி துன்னாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் மண்ணினை அகழ்ந்து கன்ரர் ரக வானகத்தில் ஒருவர் கொண்டு செல்ல முற்பட்டுள்ளார்.

அவ்வேளை சட்டவிரோத மணல் மண் கடத்தலை தடுக்கும் நோக்குடன் மோட்டார் சைக்கிளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நெல்லியடி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிசார் குறித்த வாகனத்தை மறித்துள்ளனர்.

அதன் போது சாரதி வாகனத்தை நிறுத்தாது மிக வேகமாக வாகனத்தை செலுத்தி  தப்பி செல்ல முயன்றுள்ளார். அதனை அடுத்து பொலிசார் வாகனத்தை துரத்தி சென்றுள்ளனர்.

குறித்த வாகனத்தை சாரதி துன்னாலையில் இருந்து பருத்தித்துறை வீதி ஊடாக கல்வியங்காட்டு சந்தி வரை செலுத்தி அங்கிருந்து ஆடியபாதம் வீதி ஊடாக திருநெல்வேலி சந்தி வந்து பலாலி வீதி ஊடாக கோண்டாவில் சந்திக்கு சென்று கோண்டாவில் சந்தியில் இருந்து இருபாலை வீதிக்கு திருப்ப முற்பட்ட வேளையில் அங்கிருந்த அரச மரத்துடன் வாகனம் மோதி வாகனம் விபத்துக்கு உள்ளானது.

அதனை அடுத்து வாகன சாரதியான துன்னாலையை  சேர்ந்த  31வயதுடைய பிரபா என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

அதேவேளை  வாகனத்தை சன நடமாட்டம் அதிகமுள்ள திருநெல்வேலி சந்தி ஊடாக மிக வேகமாக செலுத்தி சென்றதால் சந்தியில் நின்ற ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதியதில் அவைகள் சேதமடைந்துள்ளன.

hentar_acci_02

Share.
Leave A Reply

Exit mobile version