செல்ல நாய்களுடன் போட்டிபோட்டு ஊளையிடும் ஐந்து மாதக் குழந்தை: சிரிப்பு மூட்டும் வீடியோ இணைப்பு

 

அதீத சந்தோஷத்தை வெளிப்படுத்த நாம் சில நேரங்களில் ஊளையிட முயற்சிப்பதுண்டு.

லேரி வுட்ஸ் என்கிற ஐந்து மாதக் குழந்தையின் தந்தை இரண்டு நாய்களை வளர்த்து வருகின்றார். இந்த நாய்களுக்குள் யார் மாவீரன்? என்பதுபோல அவ்வப்போது ஊளையிடும் போட்டி நடக்கும். அதில் தனது குழந்தையும் கலந்துகொண்டு தன் பங்குக்கு போட்டிப்போட்டு ஊளையிடுவதை வீடியோவாக பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

நாய்களின் அளவுக்கு சத்தம் வரவில்லை என்றாலும், இந்த ஐந்து மாதக் குழந்தையின் ஊளையிடும் முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது.

இந்தக் குறும்பு வீடியோவை நீங்களும் கண்டுமகிழுங்கள்.

 

பூமிக்கு வந்த ஏலியன்களின் விண்கலத்தால் பரபரப்பு! (Video)

UFO-500x500

ஏலியன்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரை எத்தனையோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் ஏலியன்களின் வேற்றுகிரக விண்கலம் தெளிவாக பதிவாகியிருப்பது ஏலியன் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ போஸ்டன் நகரில் கடந்த 24-ம் திகதி இரவு 7 மணியளவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

திகிலூட்டும் அந்த வீடியோ இதோ:

Share.
Leave A Reply

Exit mobile version