ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையாகியிருந்தார்.
சட்டத்தரணிகளுடன் அவர் நேற்று முற்பகல் 10.00 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு காரியாலயத்திற்கு சென்றிருந்தார்.
எனினும், ஏழு மணித்தியாலங்கள் அங்கு காத்திருந்த போதிலும் வாக்கு மூலம் எதுவும் பதியப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நானும் எனது சட்டத்தரணிகளும் முழு நாளும் இங்கு காத்திருந்தோம்.
எனதும் எனது சட்டத்தரணிகளினதம் கால நேரம் விரயமாகியது.
இது மிகப் பெரிய உளவியல் பாதிப்பாகும். தொடர்ச்சியாக இவ்வாறுசெய்வது என்னிடம் பழிவாங்கும் நோக்கிலாகும்.
வெறுமனே எனது காலத்தை விரயமாக்குகின்றனர்.
இப்போது இவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நான் செய்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவில்லை. என்னுடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் கிடையாது.
எனினும் நான் தொடர்ச்சியாக ஆணைக்குழு எதிரில் பிரசன்னமாகின்றேன். பிரச்சனை என்னவென்றால் எனது கால நேரம் விரயமாகின்றது என்றார்.
……………………………………………………………………………….
“ஆண்டவன் நின்று அறுப்பான் – அரசன் அன்றே அறுப்பான்” என்பது பொய்யாகிவிட்டது. ஆண்டவனும் இப்போ அன்றே அறுத்துவிடுகிறான்.
(அதர்மம், அனியாயம், அக்கிரமம், ஆணவம், சர்வாதிகாரம்… என்பனவெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம்தான் கொடிகட்டிபறக்கும் (வெல்வது போன்றுதான் காட்சிதரும்)
ஆனால் கடைசியில்.. பூண்டோடு அழிந்து போகும் என்பதை பிரபாகரனின் (2009 ஆண்டே) அழிவோடு ஒவ்வொருத்தரும் படித்திருக்கவேண்டும். ஆகக்குறைந்தது மகிந்தவின் நிலமையை பார்த்தாவது புரிந்துகொள்ளவேண்டும.
நான் மட்டுமே தலைவராக இருக்கவேண்டும, நாம் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் எனப் பயணிப்பவாகளின்
நிலமை இப்படிதான் கடைசியில் முடியும் என்பதை சம்பந்தன் ஐயா அவர்களும் அறிந்துகொள்ளவேண்டும்.